இலங்கைக்கு எதிரான தொடரில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக செயல்பட்டதால் ஐசிசி ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றார். இலங்கைக்கு எதிரான தொடரில் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் ரவிந்திர ஜடேஜா சிறப்பாக செயல்பட்டார். 382 புள்ளிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின்  ஜேசன் ஹோல்டர் 2 ஆம் இடம் பிடித்தார். 


இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் முதல் இன்னிங்ஸில் 175 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதன்பின்னர் பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் ஒரே போட்டியில் 150 ரன்களுக்கு மேல் ரன்கள் மற்றும் 5 விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஜடேஜா இணைந்திருந்தார். 


 






அந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸிலும் ஜடேஜா சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இதனால் தற்போது வெளியாகியுள்ள ஐசிசி தரவரிசைப்பட்டியலில் முன்னேற்றத்தை கண்டுள்ளார். மேலும் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசைப்பட்டியலில் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். விராட் கோலி 7ஆவது இடத்திலிருந்து 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல் ரிஷப் பண்ட் 11ஆவது இடத்திலிருந்து ஒரு இடம் முன்னேற டாப்-10 வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். 


டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப்பட்டியலில் அஷ்வின் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தொடர்ந்து 10ஆவது இடத்தில் நீடிக்கிறார். இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது. இந்தப் போட்டி வரும் 12ஆம் தேதி பெங்களூருவில் மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியில் குல்தீப் யாதவிற்கு பதிலாக அக்சர் பட்டேல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண