இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக தற்போது இங்கிலாந்து சென்றுள்ளது. கொரோனா காலம் என்பதால் வீரர்கள் அங்கு சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் தற்போது அவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டு சிலர் பயிற்சியை தொடங்கியுள்ளனர். அந்தவகையில் சில வீரர்கள் தங்களின் பயிற்சி தொடர்பாக படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அந்தப் பதிவிற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்ததுள்ளது. அப்பதிவில்,"புஜாரா என்னிடம் என்ன பேசுகிறார் என்று சரியாக கண்டிப்பிடிப்பவர்களுக்கு நிச்சயம் பரிசு உண்டு " எனப் பதிவிட்டுள்ளார். மேலும் இப்பதிவு உடன் அவரும் புஜாராவும் பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது பேசும் வகையில் ஒரு நிழற்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
அஸ்வினின் இந்தப் பதிவிற்கு பல ரசிகர்கள் நகைச்சுவையாக பதிலளித்து வருகின்றனர். அதில் ஒருவர்,"அஸ்வின் நீ கோவிஷீல்ட் அல்லது கோவேக்சின் இவற்றில் எதை விரும்புவ?" என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர்,"நீ என்னை வாத்தி கம்மிங் பாடலுக்கு ரசிகனாக ஆக்கி விட்டாய் என்று கூறுகிறார். அதற்கு நீங்கள் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைக்கு ரெடியா இரு என்று கூறுகிறீர்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் ஒருவர்,"நம்ம வாத்தி கம்மிங் நடனும் ஆடுவோமா? அல்லது வலிமை அப்டேட் என்னாச்சு" என்று அவர் கேட்டிருப்பார் என்று பதிவை செய்துள்ளார். மற்றொரு ரசிகர்,"முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நீ ஆட்டநாயகன் விருதை வென்றால், அப்போது இந்த சஞ்சய் மன்ஞ்ரேக்கர் என்ன சொல்லுவார்" எனப் பதிவு இட்டுள்ளார்.
மற்றொரு ரசிகர்,"உன்னை எப்படி சிஎஸ்கே அணியிலிருந்து வெளியே விட்டார்கள் என்று புஜாரா கேட்டிருப்பார். அதற்கு நீங்கள் உன்னை எடுக்கதான் என்னை வெளியேவிட்டார்கள் என்று பதிலளித்திருப்பீர்கள்"எனப் பதிவிட்டுள்ளார். மேலும் ஒருவர்,"பயிற்சிக்கு போறதுக்கு முன்னாடி கடைசியா ஒருதடவை அந்த சஞ்சய் மண்டையனை கலாய்ச்சிட்டு வறேன். அதற்கு புஜாரா டேய் சாரி எனச் சொல்லிருப்பார்" எனப் பதிவிட்டுள்ளார்.
இவை தவிர மேலும் சில பதிவுகள்:
இவ்வாறு பலரும் தங்களது பாணியில் நகைச்சுவையாக பதிவை செய்து வருகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வரும் 18ஆம் தேதி சவுதாம்டன் நகரில் தொடங்க உள்ளது. தற்போது நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் காரணமாக அந்த அணிக்கு இறுதிப் போட்டியில் ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது என்று பல வல்லுநர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: IPL 2021 : செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்குகிறது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - ராஜிவ் ஷுக்லா உறுதி!