ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்று பெற்றது. அத்துடன் நடப்பு தொடரில் அடைந்து வந்த தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 


இந்தப் போட்டியில் கொல்கத்தா பேட்டிங்கின் போது 20 ஓவரில் பேட் கம்மின்ஸ் விக்கெட்டை கிறிஸ் மோரிஸ் எடுத்தார். அப்போது கம்மின்ஸ் கொடுத்த கேட்சை ரியான் பராக் பிடித்தார். இந்தக் கேட்சை பிடித்த பிறகு இவர் ராகுல் திவாட்டியாவுடன் இணைந்து செல்ஃபி எடுப்பது போல செய்து மகிழ்ந்தார். இவரின் இந்த செலிப்ரேஷன் ட்விட்டரில் பக்கத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 


 






ஏற்கெனவே கடந்த ஐபிஎல் தொடரில் இவர் அசாம் மாநிலத்தின் நடனத்தை ஆடி செய்த செலிப்ரேஷன் மிகவும் வைரலானது. தற்போது மீண்டும் இவரது செல்ஃபி செலிப்ரேஷன் மிகவும் வைரலாக தொடங்கியுள்ளது. இதனைப் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். 






நடப்பு தொடரில் சென்னை- கொல்கத்தா போட்டியின் போது ரவீந்திர ஜடேஜா செய்த தொலைபேசி செலிப்ரேஷன் மிகவும் வைரலானது. இதை பதிவிட்டு பலர் கேட்ச் பிடிக்க வேண்டும் என்றால் இவருக்கு அழைப்பு விடுங்கள் என்று பதிவிட்டு வந்தனர். இந்தச் சூழலில் தற்போது மீண்டும் ஒரு செலிப்ரேஷன் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாகி வருகிறது குறிப்பிடத்தக்கது. 






முன்னதாக முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கத்திலிருந்து திணறியது. இதனால் 20 ஓவர்களில் 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சானின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் 18.5 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.