தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்த முழுஉரடங்கு, கடைகள் செயல்படவும் மற்றும் வாகனங்கள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முழுஉரடங்கில் பால், மருத்துவம் உள்ளிட்ட அத்யாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்று முழுஉரடங்கின்போது தேவையின்றி வெளியில் சுற்றினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்களுக்கு பறிமுதல் செய்யப்படும்.
திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் உடற்பயிற்சி கூடங்கள் இயங்காது. நாளை காலை 4 மணி முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்.
மளிகை மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகள் குளிர்சாதன வசதி இன்றி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அம்மா உணவகங்கள் வழக்கம்போல இயங்கும்.
முழு ஊரடங்கில் அரசு டாஸ்மாக் கடைகள் இன்று செயல்படாத நிலையில் நேற்றே மதுபானங்கள் வாங்க கடைகளில் அலைமோதிய மதுபிரியர்கள் கூட்டம்.
கோவிஷில்ட் கொரோனா தடுப்பு மருந்தினை தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசியின் விளையும் உயர்வு. மாநில அரசுக்கு 600 ரூபாய்க்கும் தனியார் மருத்துவமனைக்கு 1200க்கும் விற்பனை.
டெல்லி அரசு கேட்டதைவிட அதிகமாகவே ஆக்சிஜென் வழங்கப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன்.
அரசு சார்பில் ஆக்சிஜென் அவசர தேவைகளுக்கு கால் சென்டர் அமைப்பு - 104 என்ற எண்ணில் தொடர்புகொண்டு ஆக்சிஜெனை பெறலாம்.
பெருந்துதொற்று நோய் பேராபத்தை உண்டாக்கும் என்பதற்கு இந்தியா தான் சாட்சி - எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார மையம்.
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இன்றைய முதல் ஐ.பி.எல் போட்டியில் சென்னை பெங்களூரு அணிகளும் இரவு நடக்கவிருக்கும் போட்டியில் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் மோதல்.
மேற்குத்தொடர்ச்சி மலைகளை ஒட்டிய இடங்களில் மேலும் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்.
எனது பெயரில் போலி முகப்புத்தக ஐ.டி செயல்பட்டு வருகின்றது, தயவுசெய்து அந்த கணக்கை ரிப்போர்ட் செய்யுங்கள் - பிரபல நடிகை அதுல்யா ரவி.
ரஜினியின் அரசியல் வருகை குறித்து கேலியாக அமைக்கப்பட்ட காட்சிகள் ?. ஜி.வி.பிரகாஷின் அடங்காதே படத்தில் 50க்கும் மேற்பட்ட காட்சிகளை தணிக்கைக்குழு நீக்கியாக தகவல்.