இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை தற்போது தீவிரமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி,உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வருகிறது.  கொரோனா இரண்டாவது அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் கொரோனா தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. 


இந்தச் சூழலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு ட்வீட் செய்துள்ளது. அதில், “ஜோஸ் பட்லர் உங்களிடம் ஒன்றை கூற  விரும்புகிறார்” எனப் பதிவிட்டுள்ளது. இந்தப் பதிவுடன் சேர்த்து ஒரு ஜிஃப் இமேஜையும் பதிவிட்டுள்ளது. 


 






அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர், “தயவு செய்து வீட்டில் இருங்கள்” எனக் கூறுகிறார். இந்த வீடியோவை பதிவிட்டு பொதுமக்கள் வீட்டில் இருக்க வேண்டிய அவசியத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளிப்படுத்தியுள்ளது. 




நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை இரண்டு போட்டிகளில் பங்கேற்று உள்ளது. இதில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வி அடைந்துள்ளது. ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.