மறைந்த நடிகர் விவேக் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என தமிழக அரசு சற்று முன் உத்தரவு பிறப்பித்தது. அதன் படி அவரது குடும்ப வழக்கப்படி அனைத்து சம்பிரதாயங்களும் முடித்த பின் அரசு மரியாதை முறைப்படி உடல் தகனம் செய்ய உள்ளனர்.




அரசு தரப்பில் எந்த மாதிரியான மரியாதை செலுத்தப்படும் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 26 காவலர்கள் அந்த மரியாதை நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். 26 போலீசாரும் 3 ரவுண்ட் வீதிம் மொத்தமாக 78 துப்பாக்கி குண்டுகள் முழுங்க விவேக் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.