கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தொடங்கியது உலகக் கோப்பை தொடர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இன்று (நவம்பர் 12) நடைபெற்று வரும் 45 வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.


அதிரடியாக விளையாடிய இந்தியா:


உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. முன்னதாகவே தோல்வியையே சந்திக்காமல் அரையிறுதியில் விளையாடுவதற்கான தகுதியையும் பெற்றுள்ளது. இச்சூழலில் தான், பெங்களூரு சின்னசாமி மைதனாத்தில் நடைபெற்று வரும் போட்டியில் வெற்றி முனைப்போடு விளையாடி வருகிறது இந்திய அணி. 


சின்னசாமி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் என்பதால், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய இந்திய வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியாக விளையாடினார்கள்.


இதில் ரோகித் சர்மா 61 ரன்களும் சுப்மன் கில் 51 ரன்களும் எடுத்தனர். பின்னர் வந்த விராட் கோலியும் 51 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.


இச்சூழலில் களம் இறங்கிய ஸ்ரேயாஸ் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற ஸ்ரேயாஸ் 94 பந்துகளில் 128 ரன்களை குவித்தார். 


இரண்டாவது விக்கெட் கீப்பர்:


இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் விளையாடி வருகிறார். இவர் இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடி  சதம் அடித்தார். இந்த உலகக் கோப்பை தொடரில் இவர் அடித்த முதல் சதம் இதுதான்.


அதன்படி, 64 பந்துகளில் 11 பவுண்டரிகள்,  சிக்ஸர்கள் என மொத்தம் 102 ரன்களை குவித்தார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் சதம் அடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் என்ற சாதனையை செய்தார். முன்னதாக, ராகுல் ட்ராவிட் கடந்த 1999 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.


மொத்தம் 129 பந்துகள் களத்தில் நின்ற அவர் 17 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் 145 ரன்களை குவித்தார். இது தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ஒருவர் உலகக் கோப்பை தொடரில் அடித்த முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சூழலில், 411 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நெதர்லாந்து அணி விளையாடி வருகிறது.


மேலும் படிக்க: World Cup Innings: நெதர்லாந்துக்கு எதிரான போட்டி... இந்தியாவின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் செய்த சாதனை... விவரம் இதோ!


மேலும் படிக்க: Unbeaten World Cup Teams: உலகக்கோப்பையில் தோல்வியை சந்திக்காத அணிகள்... சரித்திரம் படைக்குமா இந்தியா?