இந்தியாவின் இளம் செஸ் வீரரான பிரக்ஞானந்தா அடிக்கடி செஸ் போட்டிகளை வென்று அசத்தி வருகிறார். அந்தவகையில் தற்போது அவர் மேலும் ஒரு செஸ் தொடரில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். 16 வயதான பிரக்ஞானந்தா பாராசின் ஓபன் ஏ செஸ் போட்டியில் பங்கேற்று இருந்தார். 


 


இந்தத் தொடரில் 9 சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. அவற்றில் ஒரு போட்டியில் கூட பிரக்ஞானந்தா தோல்வி அடையாமல் இருந்தார். அத்துடன் அவர் 8 புள்ளிகள் பெற்று இந்தத் தொடரில் முதலிடம் பிடித்தார். மேலும் இந்தத் தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தினார். இவர் இந்தத் தொடரில் எழு வெற்றி மற்றும் இரண்டு டிரா செய்து அசத்தினார். 


 






இந்தத் தொடரில் இரண்டாம் நிலை வீரராக களமிறங்கிய பிரக்ஞானந்தா முதல் நிலை வீரரான ப்ரெட்கேவைவிட 0.5 புள்ளிகள் அதிகம் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். அடுத்து பிரக்ஞானந்தா இம்மாதம் 28ஆம் தேதி தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ளார். அவர் இந்திய பி அணியில் இடம்பெற்றுள்ளார். இந்த சிறப்பான ஃபார்முடன் அவர் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற நார்வே ஓபன் செஸ் தொடரிலும் பிரக்ஞானந்தா தோல்வியே அடையாமல் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். அதற்கு முன்பு நடைபெற்ற செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் இறுதிப்போட்டி வரை சென்று அசத்தியிருந்தார். இந்தச் சூழலில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு முன்பாக பிரக்ஞானந்தா சிறப்பான ஃபார்மில் உள்ளது இந்திய அணிக்கு பெரும் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண