சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து 21-15, 21-7 என்ற நேர்செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனை சேனா கவாகாமியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 










மேலும், தனது முதல் சூப்பர் 500 பட்டத்திற்கு தகுதி பெற்று பிவி சிந்து புது சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதேபோல், சிங்கப்பூர் ஓபனில் இது அவரது முதல் இறுதிப் போட்டியாகும்.


உலகின் 7ம் நிலை வீராங்கனையான சிந்து 20-15 என 5 கேம் புள்ளிகளைப் பெற்று முதல் கேமை 21-15 என கைப்பற்றினார். இரண்டாவது கேமில், முதல் நான்கு புள்ளிகளை விரைவாகப் பெற்று அற்புதமான தொடக்கம் தந்தார். தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடிய சிந்து 9-3 என புள்ளிகளை பெற்று முன்னிலை வகித்தார்.


தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய பிவி சிந்து அரையிறுதியில் 21-7 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். முன்னதாக, சிந்து காலிறுதியில் 17-21, 21-11, 21-19 என்ற செட் கணக்கில் உலகின் 19-ம் நிலை வீரரான ஹான் யுவை வீழ்த்தினார்.


லண்டன் 2012 வெண்கலப் பதக்கம் வென்ற சேனா அரையிறுதியில் தோல்வியடைந்ததையடுத்து சிங்கப்பூர் ஓபனில் இந்தியாவின் ஒரே நம்பிக்கை தற்போது சிந்து மட்டுமே. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண