ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் அடிக்கடி சிக்ஸரை விளாசும் வீரர் யார் என்றால்?. நமது நினைவுக்கு சட்டென்று வருபவர் கிறிஸ் கெய்ஸ், இவர் அடிக்கும் இமாயல சிக்ஸர்கள் பார்க்கும்போது, மனிதனா, இரும்பு மனிதனா என எண்ணத்தோன்றும். அதுவும் எந்தவித கஷ்டமும் இல்லாமல், ரொம்ப சுலபமாக பந்தை பவுண்டரி எல்லைக்கு அப்பால் பறக்கவிடுவார். இதில், சில சிக்ஸர்களால் பந்து மைதானத்தை விட்டு வெளியே சென்று, பந்து காணாமல் போன சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

  




தற்போது வரை, ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்களில் கெய்லே முதலிடத்தில் உள்ளார். அவர் 132 போட்டிகளில் 349 சிக்ஸர் விளாசியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்டிஹ்ல் 360 டிகிரி என அழைக்கப்படும் பெங்களூர் அணியின் டிவில்லியர்ஸ் 253 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும், சென்னை அணியின் கேப்டன் தோனி 216 சிக்சர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளார்.




 


மேலும், ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் கெய்லே முதலிடம் பிடித்துள்ளார். அவர், இதுவரை 6 சதங்கள் அடித்துள்ளார். பெங்களூர் அணியின் கேப்டன் கோலி 5 சதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.


 


தனிநபர் அதிகபட்ச ரன்னிலும் (175 ரன்கள்) கிறிஸ் கெய்ல் முதல் இடம் வகிக்கிறார். 2013 ஐபிஎல் தொடரில் புனே வாரியஸ் அணிக்கு எதிராக இந்த ரன்கள் அடித்த போது, 30 பந்துகளில் அவர் சதம் கண்டார். இது அதிவேக சதமாகவும் பதிவானது.