கால்பந்து உலகில் அசைக்க முடியாத ஒரு ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் மெஸ்ஸி. அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த இவர் 2004 ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி விளையாடி வருகிறார். பார்சிலோனா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் மெஸ்ஸி உள்ளார். அவர் அந்த அணியுடனான தனது 21 வருட உறவை கடந்த ஜூன் மாதம் முடித்து கொண்டார். அதன்பின்னர் பாரீஸ் செயிண்ட் ஜெர்மெயின் அணியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் பாரீஸ் செயிண்ட் ஜெர்மெயின் அணி தற்போது பிரஞ்சு லீக் தொடரில் விளையாட உள்ளது. இதற்காக வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மெஸ்ஸி உள்ளிட்ட 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. புத்தாண்டில் முதல் வாரத்தில் கால்பந்து ரசிகர்களுக்கு இது பெரிய சோகமான செய்தியாக அமைந்துள்ளது. நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது தொடர்பாக பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் அவர் விரைவில் நலம்பெற்று வர வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக பாரீஸ் செயிண்ட் அணி சார்பில் ஒரு ட்விட்டர் பதிவு போடப்பட்டிருந்தது. அதில் அவர்களுடைய அணியின் வீரர்கள் நான்கு பேருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானதாக கூறப்பட்டிருந்தது. எனினும் அந்த வீரர்கள் யார் யார் என்று அப்போது தெரிவிக்கப்படவில்லை. இந்தச் சூழலில் அந்த 4 வீரர்களில் ஒருவர் மெஸ்ஸி என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
பாரீஸ் செயிண்ட் ஜெர்மெயின் எஃப்சி அணி கடந்த 1970-ஆம் ஆண்டு முதல் கால்பந்து விளையாட்டில் இருந்து வருகிறது. பிரன்சு நாட்டில் இருக்கும் மிகவும் வெற்றிகரமான கால்பந்து அணிகளில் இது ஒன்றாகும். அங்கு நடைபெறும் உள்ளூர் லீக் போட்டிகளில் 45-க்கு மேற்பட்ட பட்டங்களை இந்த அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: டிராவிட்,கோலி,வாண்டரர்ஸ்... லக்கா மாட்டிக்கிச்சு கிக்கான காம்போ !