புரோ கபடி லீக்கின் 11 சீசன் மிக விறுப்பாக நடந்து வருகிறது. இந்த சீசனில் ஹரியானா அணி சிறப்பாக விளையாடி முதல் இடத்தில் உள்ளது. மற்ற அணிகள் எந்த இடத்தில் உள்ளது என்பதை இந்த தொகுப்பில் காண்போம்


நேற்றைய போட்டிகள்:


ப்ரோ கபடி லீக் (PKL 11) 64வது லீக் போட்டி  நொய்டா உள்விளையாட்டு மைதானத்தில், புனேரி பல்டான் மற்றும் யுபி யோதாஸ் அணிகளுக்கு இடையே நடந்தது.  பரபரப்பான இந்த போட்டியில் இரு அணிகளும்  29-29 என்ற புள்ளிகள் எடுத்ததால் போட்டியானது டிராவில் முடிவடைந்தது. யுபி யோதாஸ் அணிக்காக பவானி ராஜ்புத் சூப்பர் 10 எடுத்து அசத்தினார், அதே நேரத்தில் புனேரி பல்டானுக்காக பங்கஜ் மொஹித் புள்ளிகளைப் பெற்றார், இது PKL 11 மிக விறுப்பாக நடந்த போட்டிகளில் இதுவும் ஒன்று. 


இதற்கு முன்னதாக இதே ஆடுகளத்தில் நடந்த மற்றோரு போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை 54-31 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணி வீழ்த்தி வெற்றியைப் பெற்றது, இந்த போட்டியில் இளம் ரெய்டிங் ஜோடியான தேவாங்க் தலால் மற்றும் அயன் லோச்சப் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தேவாங்க் தலாலின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் அவரை 131 புள்ளிகளுடன் ரைடர்ஸ் லீடர்போர்டில் முதலிடத்திற்கு கொண்டு சென்றது. இந்த வெற்றியின் மூலம் பாட்னா பைரேட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது.


புள்ளிகள் பட்டியல்: 


ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 11 போட்டிகளில் 41 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. யூ மும்பா அணி ஹரியானா ஸ்டீலர்ஸை விட இரண்டு புள்ளிகள் பின்தங்கிய நிலையில் 39 புள்ளிகளுடன்,  புள்ளிகள் அட்டவணையில்  இரண்டாவது இடத்தில் உள்ளது.


புனேரி பல்டன் 37 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது, அடுத்த இடத்தில் 10 போட்டிகளில் 35 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில்  ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸை உள்ளது.


பாட்னா பைரேட்ஸின் இந்த மாபெரும் வெற்றிக்கு பிறகு  33 புள்ளிளை பெற்று, பிகேஎல் 11 புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் வைத்துள்ளது. தபாங் டெல்லி கே.சி. மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் 32 புள்ளிகளுடன் அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது.






தமிழ் தலைவாஸ் எப்படி?


தமிழ் தலைவாஸ் மற்றும் யுபி யோத்தாஸ் தலா 28 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. பெங்கால் வாரியர்ஸ் 23 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது.


பெங்களூரு புல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் தொடர்ந்து வெற்றிக்காக தொடர்ந்து போராடி வருகின்றன. பெங்களூரு புல்ஸ் அணி 14 புள்ளிகளுடன் 11 வது இடத்தில் உள்ளது, , அதே நேரத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 10 போட்டிகளில்  12 புள்ளிகளுடன்  புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.