புரோ கபடி வரலாற்றில் அதி வேகமாக 300 டேக்கில் புள்ளிகளை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை ஹரியானா ஸ்டீலர்ஸ் வீரர் முகமது ரேசா ஷட்லூயி சியானே ( ஈரான் நாட்டை சேர்ந்தவர்) படைத்துள்ளார். 


புரோ கபடி 11வது சீசன் தொடங்கி மிக விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்கிய இந்த சீசனில் மொத்தம் 12 அணிகள் இடம்பெற்றுள்ளன. இதன் முதல் சுற்று போட்டிகள் ஐதராபாத்தில் தொடங்கி நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட போட்டிகள் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்து வருகிறது. 


அதிவேக டேக்கில் புள்ளிகள்:


இந்த நிலையில்  48வது லீக் போட்டியில் யூ மும்பா மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின, போட்டியின் முடிவில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி யூ மும்பாவை 48-39 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தது. இந்த போட்டியில்  ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியின் தடுப்பாட்டகாரனான முகமது ரேசா புரோ கபடி லீக் வரலாற்றில் 300 டேக்கில் புள்ளிகளை அதி வேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை முகமது ரேசா படைத்துள்ளார். 


இதற்கு முன்பாக அவரது சக நாட்டவரான ஃபாஸல் அட்ராச்சலி இதற்கு முன்பாக 100 போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருந்தார். அந்த சாதனையை தற்போது முகமது ரேசா முறியடித்துள்ளார். இந்த சீசனில் அதிக தொகை ஏலம் போன வீரரும் இந்த முகமது ரேசா தான். ஹரியானா அணி அவரை 2.07 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 






புள்ளிப்பட்டியல்: 


இது வரை 50 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் புனேரி பல்தான் 5 வெற்றிகளை பெற்று 33 புள்ளிகளுடம்புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் 31 புள்ளிகளுடன் ஹரியானா ஸ்டிலர்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் யூ மும்பா அணி 29 புள்ளிகளுடன் மூன்றாவது  இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி மற்றும் 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. 


இன்றைய போட்டிகள்: 


இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைப்பெற உள்ளது. முதல் ஆட்டத்தில் குஜாராத் ஜெயண்ட்ஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணி மோதவுள்ளன. இரண்டாவது போட்டியில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் ஹரியானா ஸ்டிலர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.