ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனில் இன்று அதாவது ஜனவரி 16ம் தேதி தமிழ் தலைவாஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இதில், தமிழ் தலைவாஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்த சீசனில் 4வது வெற்றியை பதிவு செய்தது.
டாஸ் வென்ற தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் அணியை முதலில் ரெய்டு செய்ய அழைத்தது. போட்டி தொடங்கியது முதலே தமிழ தலைவா அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. தொடங்கிய 13 நிமிடத்திற்குள் தமிழ் தலைவாஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை ஆல் அவுட் செய்து 12 - 6 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க தொடங்கியது.
தொடர்ந்து தமிழ் தலைவாஸ் வீரர் நரேந்தர் ரெய்டில் சிறப்பாக செயல்பட்டு பாட்னா வீரர்களை அவுட் செய்ய, தமிழ் தலைவாஸ் அணியின் பாயிண்ட்ஸ்கள் குவிய தொடங்கியது. மறுபுறம் தமிழ் தலைவாஸ் அணியின் டிஃபெண்டர்களும் தொடந்து பாட்னா வீரர்களை எளிதாக வீழ்த்த, தமிழ் தலைவாஸ் அணியின் புள்ளிகள் மளமளவென உயர்ந்தது. போட்டியின் முதல் பாதி முடியும்போது தமிழ் தலைவாஸ் அணி 20 புள்ளிகளும், பாட்னா பைரேட்ஸ் அணி 11 புள்ளிகளும் எடுத்து இருந்தது.
சரியாக, இரண்டாவது பாதி தொடக்கத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை இரண்டாவது முறையாக ஆல் அவுட் செய்தது தமிழ் தலைவாஸ் அணி. அடுத்ததாக ரெய்டுக்கு உள்ளே வந்த சுதாகரை ஹிமான்ஷு டிபென்ஸ் செய்து தூக்க, மீண்டும் மோஹித் சிறப்பாக டிபென்ஸ் செய்து சச்சினை வீழ்த்தினார்.
அப்போது தமிழ் தலைவாஸ் அணி 30-12 என முன்னிலை வகிக்க தொடங்கியது. அதன்பிறகு எழுச்சியுற்ற பாட்னா அடுத்தடுத்து சிறப்பாக விளையாடி 9 புள்ளிகளை தூக்கியது. கடைசி 6 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் அஜிங்கயா 1 புள்ளிகளை அள்ளிவர, உள்ளே வந்த சச்சின் 2 பேரை தூக்கினார். தொடர்ந்து, சுதாகரை மோஹித் தூக்கி சூப்பர் டேகிளில் 2 புள்ளிகளை பெற்று தந்தார். அடுத்தடுத்து தமிழ் தலைவாஸ் அணியினர் பாயிண்ட்ஸ்களை அள்ள, இறுதியில் பாட்னா பைரேட்ஸ் அணி 41-25 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியிடம் வீழ்ந்தது.
தமிழ் தலைவாஸ் அணியில் அதிகபட்சமாக அஜிங்க்யா பவார் 10 ரெய்டு புள்ளிகளை பெற்று அசத்தியிருந்தார்.