ப்ரோ கபடி லீக் 10வது சீசனில் நேற்று தமிழ் தலைவாஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் நேருக்குநேர் மோதிகொண்டது. தமிழ் தலைவாஸ் அணியின் அஜிங்க்யா பவார் மற்றும் சாஹில் குலியாவின் சிறப்பான ஆட்டத்தால் 41-25 என்ற கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தியது.
இந்தநிலையில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் போட்டிக்கு பிறகு எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களில் உள்ளன என்பதை இங்கே பார்க்கலாம்.
பாட்னா பைரேட்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு தமிழ் தலைவாஸ் 13 போட்டிகளில் 25 புள்ளிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல், பாட்னா பைரேட்ஸ் அணி 32 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி தற்போது 53 புள்ளிகளுடன் முதலிடத்திலும், புனேரி பல்டன் 52 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தரவரிசை அட்டவணையில் தபாங் டெல்லி மூன்றாவது இடத்திலும், குஜராத் ஜெயண்ட்ஸ் நான்காவது இடத்திலும், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
புள்ளிகள் பட்டியல்:
தரவரிசை | அணிகள் | போட்டி | வெற்றி | தோல்வி | டிரா | புள்ளிகள் |
---|---|---|---|---|---|---|
1 | ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் | 13 | 9 | 2 | 2 | 53 |
2 | புனேரி பல்டன் | 12 | 10 | 2 | 0 | 52 |
3 | தபாங் டெல்லி கே.சி | 12 | 7 | 3 | 2 | 43 |
4 | குஜராத் ஜெயண்ட்ஸ் | 12 | 7 | 5 | 0 | 39 |
5 | ஹரியானா ஸ்டீலர்ஸ் | 12 | 7 | 4 | 1 | 39 |
6 | பெங்கால் வாரியர்ஸ் | 13 | 6 | 5 | 2 | 38 |
7 | யு மும்பா | 12 | 6 | 5 | 1 | 36 |
8 | பாட்னா பைரேட்ஸ் | 13 | 5 | 7 | 1 | 32 |
9 | பெங்களூரு புல்ஸ் | 13 | 5 | 8 | 0 | 32 |
10 | தமிழ் தலைவாஸ் | 13 | 4 | 9 | 0 | 25 |
11 | UP யோதாஸ் | 13 | 3 | 9 | 1 | 22 |
12 | தெலுங்கு டைட்டன்ஸ் | 12 | 1 | 11 | 0 | 10 |
யாரும் எதிர்பார்க்காத வகையில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 11வது இடத்தில் இருந்த தமிழ் தலைவாஸ் அணி நேற்றைய போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் ஒரு இடம் முன்னேறி தற்போது 10வது இடத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
அதிக ரெய்டு புள்ளிகள் யார் வசம்..?
அதிக ரெய்டு புள்ளிகளின் முதல் 5 பந்தையத்தில் தற்போது பெரிதாக மாற்றங்கள் இல்லை. பாட்னா வீரர் சச்சின் தன்வார் முதல் 5 இடங்களுக்கு நுழைந்துள்ளார். இந்த பட்டியலில் அர்ஜுன் தேஷ்வால் 148 ரெய்டு புள்ளிகளுடன் முதலிடத்திலும், மனிந்தர் சிங் 120 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இதை தொடர்ந்து, அஷு மாலிக் 113 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
- அர்ஜுன் தேஷ்வால் (ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்) - 148 புள்ளிகள்
- மனிந்தர் சிங் (பெங்கால் வாரியர்ஸ்) - 120 புள்ளிகள்
- அஷு மாலிக் (தபாங் டெல்லி) – 113 புள்ளிகள்
- சச்சின் தன்வார் (பாட்னா பைரேட்ஸ்) - 108 புள்ளிகள்
- பவன் செராவத் (தெலுங்கு டைட்டன்ஸ்) – 107 புள்ளிகள்
டிபென்ஸ் பிரிவில் யார் முதலிடம்..?
டிபென்ஸ் பிரிவில் பெரிய மாற்றங்கள் தற்போது நிகழ்ந்துள்ளன. நேற்றைய போட்டியில் 4 புள்ளிகளை பெற்ற சாஹில் குலியா 46 டிபென்ஸ் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். சாகர் ரதி 45 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், சுபம் ஷிண்டே 47 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளனர்.
- சுபம் ஷிண்டே (பெங்கால் வாரியர்ஸ்) - 47 புள்ளிகள்
- சாஹில் குலியா (தமிழ் தலைவாஸ்) – 46 புள்ளிகள்
- முகமதுரேசா ஷட்லூயி (புனேரி பல்டன்) – 45 புள்ளிகள்
- சாகர் ராத் (தமிழ் தலைவாஸ்) - 45 புள்ளிகள்
- சுமித் (யுபி யோதாஸ்) - 44 புள்ளிகள்
ப்ரோ கபடி லீக் 2023 இன் சீசன் 10 கடந்த டிசம்பர் 2, 2023 அன்று தொடங்கி, ஜனவரி 31, 2023 அன்று முடிவடைகிறது.