Tamil Thalaivas vs Jaipur Pink Panthers LIVE: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்! முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தேர்வு!
Tamil Thalaivas vs Jaipur Pink Panthers LIVE: தமிழ் தலைவாஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
மு.வா.ஜெகதீஸ் குமார் Last Updated: 31 Jan 2024 10:13 PM
Background
ப்ரோ கபடி லீக் சீசன் 10ன் 99-வது ஆட்டத்தில் இன்று ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, தமிழ் தலைவாஸ் அணி விளையாடிவருகிறது. கடந்த போட்டிகளில் இரு அணிகளும் எப்படி..? கடந்த ஜனவரி 28ம் தேதி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, பெங்களூரு புல்ஸ் அணிக்கு...More
ப்ரோ கபடி லீக் சீசன் 10ன் 99-வது ஆட்டத்தில் இன்று ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, தமிழ் தலைவாஸ் அணி விளையாடிவருகிறது. கடந்த போட்டிகளில் இரு அணிகளும் எப்படி..? கடந்த ஜனவரி 28ம் தேதி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிராக 28-28 என்ற கணக்கில் போட்டியை டிரா செய்தது. மறுபுறம், அதேநாளில் தமிழ் தலைவாஸ் தனது கடைசி ஆட்டத்தில் யு மும்பா அணியை 50-34 என வீழ்த்தி வெற்றி பெற்றது.ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs தமிழ் தலைவாஸ் அணிகள் நேருக்குநேர்:ப்ரோ கபடி லீ வரலாற்றில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், தமிழ் தலைவாஸ் அணியும் இதுவரை 9 முறை நேருக்குநேர் மோதியுள்ளனர். இதில், அதிகபட்சமாக ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 5 முறை வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, தமிழ் தலைவாஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், இவ்விரு அணிகளுக்குமிடையிலான இரண்டு போட்டிகள் டிரா ஆகியுள்ளது. கடைசியாக இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, தமிழ் தலைவாஸ் அணியை 25-24 என்ற கணக்கில் வீழ்த்தியது. புள்ளி பட்டியலில் இரு அணிகளின் தரவரிசை:16 போட்டிகளுக்குப் பிறகு, ப்ரோ கபடி லீக் சீசன் 10 புள்ளிகள் பட்டியலில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை ஜெய்ப்பூர் அணி 11 வெற்றி, 2 தோல்வி, 3 டிராவுடன் 66 புள்ளிகள் குவித்து சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. அதேசமயம், தமிழ் தலைவாஸ் 40 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. 7 வெற்றியும், 9 முறை தோல்வியடைந்தாலும், கடந்த சில போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. இரு அணிகளின் விவரம்: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்ரைடர்கள்- ராகுல் சவுதாரி, அர்ஜுன் தேஷ்வால், அஜித் குமார், பவானி ராஜ்புத், தேவாங்க், நவ்நீத் ஷெராவத், அமீர் ஹொசைன் முகமதுமலேகி, ஷஷாங்க், அபிஜீத் மாலிக்.டிஃபெண்டர்கள்- சுனில் குமார், சாகுல் குமார், அங்குஷ், சுமித், அபிஷேக் கே.எஸ்., ரேசா மிர்பாகேரி, லக்கி ஷர்மா, ஆஷிஷ், லாவிஷ்.தமிழ் தலைவாஸ்ரைடர்ஸ்- நரேந்தர் கண்டோலா, அஜிங்க்யா அசோக் பவார், ஹிமான்ஷு, ஜதின்.டிஃபெண்டர்கள்- சாகர், சாஹில், எம் அபிஷேக், மோஹித், ஹிமான்ஷு, ஆஷிஷ், எம்டி ஆரிப் ரப்பானி, அர்பித் சரோஹா, அங்கித்.ஆல்-ரவுண்டர்கள்- தனுஷன் லக்ஷ்மமோகன், விஸ்வநாத் வி, கே அபிமன்யு.இன்றைய போட்டியில் படைக்கவிருக்கும் மைல்கற்கள்:பிகேஎல்லில் 100 டிபெண்ஸ் புள்ளிகளை எட்டுவதற்கு தமிழ் தலைவாஸின் எம்.அபிஷேக்கிற்கு இன்னும் 7 டிபெண்ஸ் புள்ளிகள் மட்டுமே தேவையாக உள்ளது. கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- சாஹுல் குமார், ரேசா மிர்பாகேரி, அங்குஷ் ஜூனியர், சுனில் குமார் (கேப்டன்), அபிஷேக் கே.எஸ், அர்ஜுன் தேஷ்வால், வி அஜித் குமார்.தமிழ் தலைவாஸ்- சாகர் (கேப்டன்), சாஹில், மோஹித், அபிஷேக், ஹிமான்ஷு, அஜிங்க்யா பவார், நரேந்தர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Tamil Thalaivas vs Jaipur Pink Panthers LIVE: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்! முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தேர்வு!