Thalaivas vs Gujarat Giants LIVE: போராட்டத்தின் உச்சகட்டம்; போராடி வீழ்ந்த தமிழ் தலைவாஸ்; குஜராத் வெற்றி

Thalaivas vs Gujarat Giants LIVE: தமிழ் தலைவாஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 27 Dec 2023 10:17 PM
போராட்டத்தின் உச்சகட்டம்; போராடி வீழ்ந்த தமிழ் தலைவாஸ்; குஜராத் வெற்றி

தமிழ் தலைவாஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் குஜராத் 33 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் 30 புள்ளிகளும் எடுத்தது. குஜராத் அணி 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Thalaivas vs Gujarat Giants LIVE: குஜராத் ஜெயிண்ட்ஸ் வெற்றி

தமிழ் தலைவாஸ் அணி குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

Thalaivas vs Gujarat Giants LIVE: குஜராத்தின் வெற்றியை தட்ட்ப்பறிக்குமா தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி குஜராத் அணியை விட 4 புள்ளிகள் பின்னடைவில் உள்ளது. குஜராத் அணி 31 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் அணி 27 புள்ளிகளும் எடுத்துள்ளது. 

Thalaivas vs Gujarat Giants LIVE: ஒரு புள்ளி பின்னடைவில் தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி குஜராத் அணியை விடவும் ஒரு புள்ளி பின்னடைவில் உள்ளது. 

Thalaivas vs Gujarat Giants LIVE: பரபரப்பில் போட்டி

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் பரபரப்பாக  நடைபெற்று வருகின்றது. 

Thalaivas vs Gujarat Giants LIVE: இரண்டாம் பாதியின் டைம் - அவுட்

போட்டி இரண்டாம் பாதியின் டைம் அவுடிற்கு வந்துள்ளது. தற்போது குஜராத் அணி 25 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் அணி 21 புள்ளிகளும் எடுத்துள்ளது. 

Thalaivas vs Gujarat Giants LIVE: ஆல் - அவுட் ஆன தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி ஆல் - அவுட் ஆகியுள்ளது. இதனால் குஜராத் அணி தற்போது 24 புள்ளிகள் எடுத்துள்ளது. தமிழ் தலைவாஸ் அணி 19 புள்ளிகள் எடுத்துள்ளது. 

Thalaivas vs Gujarat Giants LIVE: சொதப்பும் தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி டிஃபெண்டிங்கில் சொதப்பி வருவதால் புள்ளிகளை வாரி வழங்கி வருகின்றது. 

Thalaivas vs Gujarat Giants LIVE: சூப்பர் டேக்கிளில் புள்ளிகளை அள்ளிய தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி சூப்பர் டேக்கிள் செய்து 2 புள்ளிகளை அள்ளியுள்ளது. தற்போது தமிழ் தலைவாஸ் 16 புள்ளிகள் எடுத்துள்ளது. 

Thalaivas vs Gujarat Giants LIVE: தொடங்கியது இரண்டாம் பாதி

தமிழ் தலைவாஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் இரண்டாவது பாதி தொடங்கியது. 

Thalaivas vs Gujarat Giants LIVE: முதல் பாதி ஆட்டம் முடிந்தது

முதல் பாதி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 13 புள்ளிகளுடனும் குஜராத் 16 புள்ளிகளுடனும் விளையாடி வருகின்றது. 

Thalaivas vs Gujarat Giants LIVE: முன்னிலையில் குஜராத்

தமிழ் தலைவாஸ் அணியைவிடவும் குஜராத் அணி 4 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது. குஜராத் அணி 16 புள்ளிகளுடனும், தமிழ் தலைவாஸ் 12 புள்ளிகளுடன் விளையாடி வருகின்றது. 

Thalaivas vs Gujarat Giants LIVE: சூப்பர் டேக்கிளில் இரண்டு புள்ளிகள் அள்ளிய குஜராத்

தமிழ் தலைவாஸ் அணியின் ஹிமான்சுவை மடக்கிப் பிடித்ததால் குஜராத் அணிக்கு சூப்பர் டேக்கிளில் 2 புள்ளிகள் கிடைத்துள்ளது. 

Thalaivas vs Gujarat Giants LIVE: ரெய்டில் புள்ளியை எடுத்து வந்த ஹிமான்ஷு

ஹிமான்ஷு தவறி விழுந்த ரவியை தொட்டு அணிக்கு ஒரு புள்ளியைப் பெற்றுக்கொடுத்தார். 

Thalaivas vs Gujarat Giants LIVE: மீண்டும் தொடங்கியது ஆட்டம்

டைம் அவுட்டிற்குப் பின்னர் போட்டி தொடங்கியது. 

Thalaivas vs Gujarat Giants LIVE: டைம் அவுட்டின் போது ஆட்ட நிலை

போட்டியின் முதல் பாதியின் டைம் அவுட்டின்போது  இரு அணிகளும் தலா 7 புள்ளிகள் எடுத்துள்ளனர். 

Thalaivas vs Gujarat Giants LIVE: கபடி பார்க்க வந்த மாரி செல்வராஜ்

தமிழ் தலைவாஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியைக் காண இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் துரு விக்ரம் வந்துள்ளனர். 

Thalaivas vs Gujarat Giants LIVE: முன்னிலையில் தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியைவிட 2 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது. தமிழ் தலைவாஸ் 4 புள்ளிகள், குஜராத் 2 புள்ளிகள். 

Thalaivas vs Gujarat Giants LIVE: புள்ளிக் கணக்கை தொடங்கிய தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி தனது புள்ளிக்கணக்கை துவங்கியுள்ளது. 

Thalaivas vs Gujarat Giants LIVE: களமிறங்கும் சதிஷ் கண்ணன்

தமிழ் தலைவாஸ் அணி சார்பில் தமிழ்நாடு வீரர் சதிஷ் கண்ணன் களமிறங்கியுள்ளார். 

Thalaivas vs Gujarat Giants LIVE: களத்திற்கு வந்த தமிழ் தலைவாஸ் அணி

 தமிழ் தலைவாஸ் அணி களத்திற்கு வந்துள்ளது. 

Thalaivas vs Gujarat Giants LIVE: சற்று நேரத்தில் தமிழ் தலைவாஸ் போட்டி

இன்னும் சற்று நேரத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் தமிழ் தலைவாஸ் அணிக்கும் இடையில் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. 

Background

Pro Kabaddi 2023 Tamil Thalaivas: ப்ரோ கபடி லீக் 2023 இன் 44வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி குஜராத் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோத உள்ளது. சென்னையில் உள்ள  நேரு உள்விளையாட்டு அரங்கில் உள்ள SDAT மைதானத்தில் இன்று அதாவது டிசம்பர் 27 புதன்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் தபங் டெல்லி அணிகள் மோதவுள்ளது. 


தமிழ் தலைவாஸ் அணி சென்னையில் நடைபெற்ற மூன்று போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது. சொந்த மண்ணில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு களமிறங்கிய தமிழ் தலைவாஸ் அணி வெற்றிகளைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோது சொந்த மண்ணில் தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது ரசிகர்களுக்கும் அணி நிர்வாகத்திற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணி தனது சொந்த மண்ணில் இன்று தனது கடைசி லீக் போட்டியில் களமிறங்குகின்றது. இதில் பலமான குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியினை எதிர்கொள்ளவுள்ளது. சொந்த மண்ணில் கடைசி லீக் போட்டி என்பதாலும், தமிழ்நாடு ரசிகர்கள் முன்னிலையில் ஒரு வெற்றியாவது அடைந்து அவர்களை திருப்தி படுத்தவேண்டும் எனவும் தமிழ் தலைவாஸ் அணி இன்று களம் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


தமிழ் தலைவாஸ் அணியைப் பொறுத்தவரையில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 11 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்தவரையில் ஒரு ஹாட்ரிக் தோல்விக்குப் பின்னர் கடந்த போட்டியில் பலமான யு.பி. யோதாஸ் அணியை 38-30 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது.


குஜராத் அணியைப் பொறுத்தவரையில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 23 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. 


தமிழ் தலைவாஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் - அணிகளில் இன்று களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படும் வீரர்கள்


தமிழ் தலைவாஸ் : சாகர் (கேப்டன்), நரேந்தர் ஹோஷியார், ஹிமான்ஷு நர்வால், எம். அபிஷேக், ஹிமான்ஷு, சாஹில் குலியா மற்றும் ஆஷிஷ். தமிழ்நாட்டினைச் சேர்ந்த செல்வமணி இன்றைய போட்டியில் களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. 


குஜராத் ஜெயண்ட்ஸ் : ஃபாசல் அட்ராச்சலி (கேப்டன்), சோனு ஜக்லன், ரோஹித் குலியா, ரவிக்குமார், பாலாஜி டி, ராகேஷ் மற்றும் சோம்பிர்


நேரடி ஒளிபரப்பு 


இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி இந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 கன்னடம் & ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 போன்ற தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. 


இதுமட்டும் இல்லாமல் ஓடிடி தளங்களில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. மேலும் வலைதளங்களில் ஏபிபி நாடு வலைதளத்தில் போட்டி குறித்த லைவ் அப்டேட்களைக் காணலாம். 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.