Tamil Thalaivas vs Bengaluru Bulls LIVE: போராடி தோற்ற தமிழ் தலைவாஸ்... பெங்களூரு புல்ஸ் அசத்தல் வெற்றி!
Tamil Thalaivas vs Bengaluru Bulls LIVE: தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
மு.வா.ஜெகதீஸ் குமார் Last Updated: 31 Dec 2023 10:17 PM
Background
Pro Kabaddi League 2023: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர்...More
Pro Kabaddi League 2023: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. இந்த தொடரில், உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள ஷஹீத் விஜய் சிங் பதிக் விளையாட்டு அரங்கத்தில் இன்று (டிசம்பர் 31) நடைபெறும் 50 வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. தமிழ் தலைவாஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதல் :நடப்பு சீசனில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 2ல் வெற்றி, 6-ல் தோல்வி என 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது. அந்த அணி மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும். ஏற்கனவே தொடர் தோல்விகளால் துவண்டுள்ள அந்த அணிக்கு இன்றைய போட்டி மிகவும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதேபோல், 20 புள்ளிகளுடன் பட்டியலில் 10வது இடத்தில் இருக்கும் பெங்களூரு புல்ஸ் அணிக்கும் இது முக்கிய போட்டியாகும். அந்த அணியும் வெற்றிக்கு கடுமையாக போராடும். எனவே இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டம் பரபரப்புடன் இருக்கும்.தமிழ் தலைவாஸ்:ரைடர்ஸ்- பவன் செஹ்ராவத், அஜிங்க்யா அசோக் பவார், ஹிமான்ஷு, ஜதின், ஹிமான்ஷுடிஃபெண்டர்கள்- சாகர், சாஹில், எம் அபிஷேக், மோஹித், ஹிமான்ஷு, ஆஷிஷ், எம்டி ஆரிப் ரப்பானி, அர்பித் சரோஹா, அங்கித்ஆல்-ரவுண்டர்கள்- தனுஷன் லக்ஷ்மமோகன், விஸ்வநாத் வி, கே அபிமன்யுபெங்களூரு புல்ஸ்:ரைடர்ஸ்- விகாஷ் கண்டோலா, மோனு, பியோட்டர் பமுலக், அபிஷேக் சிங், பாந்தி, நீரஜ் நர்வால், சுஷில், பாரத், அக்ஷித்டிஃபெண்டர்கள்- சுர்ஜித், விஷால், ரக்ஷித், போனபார்த்திபன் சுப்ரமணியன், சவுரப் நந்தால், அமன், சுந்தர், யாஷ் ஹூடா, எம்.டி.லிட்டன், ஆதித்யா பவார், பிரதீக், அங்கித், அருள்நந்தபாபு, ரோஹித் குமார்.ஆல்-ரவுண்டர்கள்- ரன் சிங், சச்சின் நர்வால். நேரடி ஒளிபரப்பு இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி இந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 கன்னடம் & ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 போன்ற தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதுமட்டும் இல்லாமல் ஓடிடி தளங்களில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. மேலும் வலைதளங்களில் ஏபிபி நாடு வலைதளத்தில் போட்டி குறித்த லைவ் அப்டேட்களைக் காணலாம்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
: Tamil Thalaivas vs Bengaluru Bulls LIVE: போராடி தோற்ற தமிழ் தலைவாஸ்... பெங்களூரு புல்ஸ் அசத்தல் வெற்றி!
தமிழ் தலைவாஸ் அணி போராடி தோற்றுள்ளது. அந்த வகையில் 37-38 என்ற புள்ளிகள் அடிப்படையில் பெங்களூரு புல்ஸ் அணி இன்றைய 50 வது லீக் போட்டியில் வெற்றி பெற்றது.