Tamil Thalaivas Vs Dabang Delhi LIVE: கோட்டை விட்ட தமிழ் தலைவாஸ்; இறுதியில் சொதப்பல்; டெல்லி வெற்றி

Tamil Thalaivas Vs Dabang Delhi LIVE: தமிழ் தலைவாஸ் அணி டெல்லி தபாங் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 14 Feb 2024 08:59 PM
Tamil Thalaivas Vs Dabang Delhi LIVE: கோட்டை விட்ட தமிழ் தலைவாஸ்; தபங் டெல்லி வெற்றி

தமிழ் தலைவாஸ் அணி டெல்லி தபங் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தபங் டெல்லி அணி வெற்றி பெற்றது. டெல்லி அணி 45 ரன்களும் டெல்லி அணி 43 ரன்களும் சேர்த்தது. 

Tamil Thalaivas Vs Dabang Delhi LIVE: மூன்றாவது முறையாக ஆல் அவுட் ஆன தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி டெல்லி அணிக்கு எதிராக மூன்றாவது முறையாக ஆல் அவுட் ஆகியுள்ளது. 

Tamil Thalaivas Vs Dabang Delhi LIVE: இக்கட்டான் நிலையில் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி 38 புள்ளிகளும் டெல்லி அணி 35 புள்ளிகளும் எடுத்துள்ளது. இந்த சூழல் தலைவாஸ் அணிக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. 

Tamil Thalaivas Vs Dabang Delhi LIVE: இரண்டாவது முறையாக ஆல் - அவுட் ஆன தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி இரண்டாவது முறையாக ஆல் அவுட் ஆனது. 

Tamil Thalaivas Vs Dabang Delhi LIVE: அவசரப்படும் தலைவாஸ் டிஃபெண்டர்ஸ்

தமிழ் தலைவாஸ் அணியின் டிஃபெண்டர்ஸ் சொதப்பி வருவதால் டெல்லி அணி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 

Tamil Thalaivas Vs Dabang Delhi LIVE: இரண்டாம் பாதியின் டைம் அவுட்

போட்டியின் இரண்டாம் பாதியின் டைம் அவுட் விடப்பட்டுள்ளது. போட்டியில் தற்போது தமிழ் தலைவாஸ் அணி ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. தமிழ் தலைவாஸ் அணி 36 புள்ளிகளும் டெல்லி அணி 24 புள்ளிகளும் எடுத்து விளையாடி வருகின்றது. 

Tamil Thalaivas Vs Dabang Delhi LIVE: 30 புள்ளிகளைக் கடந்த தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி 35 புள்ளிகள் எடுத்து விளையாடி வருகின்றது. டெல்லி அணி 24 புள்ளிகள் எடுத்து விளையாடி வருகின்றது. 

Tamil Thalaivas Vs Dabang Delhi LIVE: மூன்றாவது முறையாக ஆல் அவுட் ஆன டெல்லி

டெல்லி அணி மூன்றாவது முறையாக ஆல் அவுட் ஆகியுள்ளது. 

Tamil Thalaivas Vs Dabang Delhi LIVE: மூன்றாவது முறையாக ஆல் அவுட் ஆகும் நிலையில் டெல்லி

தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக டெல்லி அணி ஆல் அவுட் ஆகும் நிலையில் உள்ளது. 

Tamil Thalaivas Vs Dabang Delhi LIVE: தமிழ் தலைவாஸ் ஆல் - அவுட்

இரண்டாம் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி ஆல் - அவுட் ஆனது. 

Tamil Thalaivas Vs Dabang Delhi LIVE: முன்னேறி வரும் டெல்லி

டெல்லி அணி தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி வருகின்றது. 

Tamil Thalaivas Vs Dabang Delhi LIVE: தொடங்கிய இரண்டாம் பாதி

தமிழ் தலைவாஸ் அணி டெல்லி அணிக்கு இடையிலான போட்டியின் இரண்டாம் பாதி தொடங்கியது. 

Tamil Thalaivas Vs Dabang Delhi LIVE: முடிந்தது முதல் பாதி

முதல் பாதி ஆட்டம் முடிந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணி 25 புள்ளிகளும் டெல்லி அணி 14 புள்ளிகளும் எடுத்துள்ளது. 

Tamil Thalaivas Vs Dabang Delhi LIVE: சூப்பர் டேக்கிள்

டெல்லி அணிக்கு எதிராக தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனின் 30வது சூப்பர் டேக்கிளை நிகழ்த்தியுள்ளது. 

Tamil Thalaivas Vs Dabang Delhi LIVE: 20 புள்ளிகளைக் கடந்த தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி 23 புள்ளிகளும் டெல்லி அணி 14 புள்ளிகளும் எடுத்து விளையாடி வருகின்றது. 

Tamil Thalaivas Vs Dabang Delhi LIVE: துவம்சம் ஆகும் டெல்லி

தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதால் டெல்லி அணி இரண்டாவது முறையாக ஆல் அவுட் ஆகியுள்ளது. 

Tamil Thalaivas Vs Dabang Delhi LIVE: தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி டெல்லி அணிக்கு எதிராக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. 

Tamil Thalaivas Vs Dabang Delhi LIVE: முடிந்தது முதல் 10 நிமிடங்கள்

முதல் 10 நிமிடங்களில் தமிழ் தலைவாஸ் அணி 14 புள்ளிகளும் டெல்லி அணி 8 புள்ளிகளும் எடுத்துள்ளது. 

Tamil Thalaivas Vs Dabang Delhi LIVE: சிதையும் டெல்லி; ஆதிக்கம் செலுத்தும் தமிழ் தலைவாஸ்!

டெல்லி அணி ஆல் அவுட் ஆனதால், தமிழ் தலைவாஸ் அணி புள்ளிகளை அள்ளி வருகின்றது. தலைவாஸ் அணி 11 புள்ளிகளும் டெல்லி அணி 4 புள்ளிகளும் எடுத்துள்ளது. 

Tamil Thalaivas Vs Dabang Delhi LIVE: ஏறி ஆடும் தலைவாஸ்; சிதையும் டெல்லி

டெல்லி அணிக்கு எதிராக தமிழ் தலைவாஸ் அணி புள்ளிகளை குவித்து வருகின்றது. 

Tamil Thalaivas Vs Dabang Delhi LIVE: முதல் புள்ளியை விட்டுக் கொடுத்த டெல்லி

டெல்லி அணி தமிழ் தலைவாஸ் அணிக்கு புள்ளியை விட்டுக் கொடுத்துள்ளது. 

Tamil Thalaivas Vs Dabang Delhi LIVE: தொடங்கியது ஆட்டம்

தமிழ் தலைவாஸ் டெல்லி தபங் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியது. 

Tamil Thalaivas Vs Dabang Delhi LIVE: ஆறுதல் வெற்றியை நோக்கி களம் காணும் தமிழ் தலைவாஸ்; டெல்லியை தகர்க்குமா?

ப்ளே ஆஃப் சுற்றிகு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துள்ள தமிழ் தலைவாஸ் அணி தனக்கு லீக் சுற்றில் மீதம் உள்ள இரண்டு போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு உள்ளனர். 

Tamil Thalaivas Vs Dabang Delhi LIVE: களத்திற்கு வந்த வீரர்கள்

தமிழ் தலைவாஸ் மற்றும் தபங் டெல்லி அணி வீரர்கள் ஆடுகளத்திற்கு வந்துள்ளனர். 

Background

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு ஸ்டேடியத்தில் ப்ரோ கபடி லீக் சீசன் 10ன் 120வது போட்டியில் தபாங் டெல்லி அணியும், தமிழ் தலைவாஸ் அணியிம் மோத இருக்கின்றன. 


இந்த சீசனில் தபாங் டெல்லி 20 போட்டிகளில் 69 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இருப்பினும், முந்தைய தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான போட்டியில் தபாங் டெல்லி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும், தபாங் டெல்லி அணிக்கு இரண்டு போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் முந்தி செல்ல கடுமையாக போராடும். தற்போது புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள தபாங் டெல்லி , தனது 21வது போட்டியில் விளையாடவுள்ளது.


அதேநேரத்தில், தமிழ்தலைவாஸ் அணி தனது ப்ரோ கபடி லீக்கின் 21வது போட்டியில் இன்று விளையாடுகிறது. இதுவரை இந்த சீசனில் 12 போட்டிகளில் தோல்வியடைந்து 8 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. ஏற்கனவே, பிளே ஆஃப் சுற்றை இழந்த தமிழ்தலைவாஸ் அணி இனி வரும் போட்டிகளில் வெற்றிபெற்று ஆறுதல் பரிசை பெற விரும்பும். 


இரு அணிகளும் கடந்த போட்டிகளில் எப்படி..?


தமிழ் தலைவாஸ் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 3ல் தோல்வியடைந்துள்ளது. இந்த அணி கடைசியாக புனேரி பல்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடி (56-29) என்ற கணக்கில் மோசமான தோல்விய சந்தித்தது. அதேபோல், தபாங் டெல்லி அணியும் தனது கடைசி ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியிடம் 22-27 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.


இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்: 


ப்ரோ கபடி லீக் வரலாற்றில் தபாங் டெல்லி மற்றும் தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 9 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் அதிகபட்சமாக தபாங் டெல்லி 5 போட்டிகளிலும், தமிழ் தலைவாஸ் அணி 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டி டிராவில் முடிந்துள்ளது. 


விளையாடிய போட்டிகள் - 9


தபாங் டெல்லி வென்ற போட்டிகள் - 5


தமிழ் தலைவாஸ் வென்ற போட்டிகள் - 2


கடந்த 3 போட்டிகளிலும் இரு அணிகளும் நேருக்குநேர்: 


தமிழ் தலைவாஸ் தனது கடைசி மூன்று ப்ரோ கபடி லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லிக்கு எதிராக இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு போட்டியை டிரா செய்துள்ளது. 


இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 42-31 தபாங் டெல்லி அணிக்கு எதிராக அபார வெற்றிபெற்றது. அந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியின் அஜிங்க்யா பவார் 21 புள்ளிகளை பெற்று அசத்தினார். 


கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: 


தபாங் டெல்லி: 


அஷு மாலிக், மோஹித், விக்ராந்த், நவீன் குமார் (கேப்டன்), மீது சர்மா, யோகேஷ், ஆஷிஷ்


தமிழ் தலைவாஸ்: 


சாகர் ரதி (கேப்டன்), சாஹில், மோஹித், எம். அபிஷேக், ஹிமான்ஷு, அஜிங்க்யா பவார், நரேந்தர் ஹோஷியார்.


போட்டியை எங்கு, எப்போது பார்க்கலாம்..? 


தபாங் டெல்லி மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரடியாக கண்டுகளிக்கலாம். அதேபோல், ஹாட்ஸ்டாரில் நேரடியாக மொபைல் மற்றும் லேப்டாப்பில் காணலாம். 


நேரம் - இரவு 8:00 மணி


ஸ்ட்ரீமிங்- ஸ்டார் ஸ்போர்ட்ஸ்/ டிஸ்னி+ ஹாட்ஸ்டார்.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.