Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: தவிடுபொடியான தமிழ் தலைவாஸ் உத்தி; புனேரி பல்தான் இமாலய வெற்றி

Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை ஏபிபி நாடு வலைதளத்தில் காணலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 11 Feb 2024 09:02 PM
Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: தவிடுபொடியான தமிழ் தலைவாஸ் உத்தி; புனேரி பல்தான் இமாலய வெற்றி

தமிழ் தலைவாஸ் அணி 29 புள்ளிகளும் புனேரி அணி 56 புள்ளிகளும் எடுத்ததால் இந்த போட்டியில் புனேரி பல்தான் அணி 27 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தோல்வி மூலம் தமிழ் தலைவாஸ் அணி தனது ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. 

Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: 25 புள்ளிகளை எட்டிய தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி 25 புள்ளிகள் எடுத்து விளையாடி வருகின்றது. 

Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: 50 புள்ளிகளை எட்டிய புனேரி

புனேரி பலதான் அணி 50 புள்ளிகள் எடுத்து விளையாடி வருகின்றது. தலைவாஸ் 22 புள்ளிகள் எடுத்துள்ளது. 

Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: 30 நிமிடங்கள் முடிவில்

30 நிமிடங்கள் முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 15 புள்ளிகளும் புனேரி பல்தான் அணி 45 புள்ளிகளும் எடுத்துள்ளது. 

Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: 31 புள்ளிகள் முன்னிலையில் புனேரி

புனேரி அணி தமிழ் தலைவாஸ் அணியை விட 31 புள்ளிகள் முன்னிலையில் உள்ளது. 

Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: மூன்றாவது முறையாக ஆல் அவுட் ஆன தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி மூன்றாவது முறையாக ஆல் அவுட் ஆகியுள்ளது. 

Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: ஆத்திரத்தில் புள்ளிகளை வாரிக்கொடுக்கும் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் வீரர்கள் ஆத்திரத்தில் புள்ளிகளை புனேரி அணிக்கு வாரி வழங்கி வருகின்றனர். 

Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: 30 புள்ளிகளைக் கடந்த புனேரி

இரண்டாம் பாதி தொடக்கத்தில் புனேரி அணி 33 புள்ளிகள் எடுத்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. 

Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: தொடங்கிய இரண்டாம் பாதி

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியுள்ளது. 

Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: முடிந்தது முதல் பாதி

முதல் பாதி ஆட்டம் முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 10 புள்ளிகளும் புனேரி பல்தான் அணி 28 புள்ளிகளும் எடுத்துள்ளது. 

Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: இரண்டாவது முறையாக ஆல் அவுட் ஆன தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி இரண்டாவது  முறையாக ஆல் அவுட் ஆகியுள்ளது. 

Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: 11 புள்ளிகள் வித்தியாசம்

புனேரி அணி 20 புள்ளிகளும் தலைவாஸ் அணி 9 புள்ளிகளும் எடுத்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் 11 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது. 

Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: டைம் பாஸ் செய்யும் புனேரி

புனேரி பல்தான் அணி ரெய்டு செல்லும்போது டைம் பாஸ் செய்து கொண்டு உள்ளனர். 

Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: தடுமாறும் தமிழ் தலைவாஸ்

புனேரி அணிக்கு எதிராக தமிழ் தலைவாஸ் அணி தடுமாறி வருகின்றது. 

Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: முதல் 10 நிமிடங்கள் முடிவில்

முதல் 10 நிமிடங்கள் முடிந்துள்ள நிலையில் புனேரி அணி 15 புள்ளுகளும், தமிழ் தலைவாஸ் 6 புள்ளிகளும் எடுத்துள்ளது. 

Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: ஆதிக்கம் செலுத்தும் புனேரி

புனேரி பல்தான் அணி தமிழ் தலைவாஸ்க்கு எதிரான போட்டியில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. 

Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: தமிழ் தலைவாஸ் ஆல் அவுட்

தமிழ் தலைவாஸ் அணி ஆல் - அவுட் ஆகியுள்ளது. இதனால் புனேரி அணி 11 புள்ளிகள் எடுத்துள்ளது. 

Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: புள்ளிக் கணக்கை தொடங்கிய தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி புள்ளிக் கணக்கை தொடங்கியது. 

Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: புள்ளிக் கணக்கை தொடங்காத தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி இன்னும் ஒரு புள்ளி கூட எடுக்கவில்லை. புனேரி அணி 6 புள்ளிகள் எடுத்துள்ளது. 

Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: புள்ளிக்கணக்கை தொடங்கிய புனேரி

புனேரி அணி புள்ளிக்கணக்கை தொடங்கியுள்ளது. புனேரி அணி 3 புள்ளிகள் எடுத்துள்ளது. 

Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள்

நரேந்தர், ரொனாக், ஆஷிஷ், அஜிங்கியா பவார், முகமது ரசா, அமீர் ஹுசைன், ஷாகில் குலியா

Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: புனேரி வென்றால் என்ன ஆகும்

இந்த போட்டியில் புனேரி பல்தான் வென்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் இரண்டாவது அணி என்ற பெருமையைப் பெறும். 

Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: களத்திற்கு வந்த வீரர்கள்

இரு அணியின் வீரர்களும் களத்திற்கு வந்துள்ளனர். 

Background

ப்ரோ கபடி லீக் சீசன் 10ன் 115வது போட்டியில் இன்று (பிப்ரவரி 11) தமிழ் தலைவாஸ் அணி, பலமிக்க  புனேரி பல்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 08:00 மணிக்கு தொடங்குகிறது.


இரு அணிகளும் கடந்த போட்டிகளில் எப்படி?


கடந்த பிப்ரவரி 6 ம் தேதி நடைபெற்ற உபி யோதாஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு தமிழ் தலைவாஸ் இந்த போட்டியில் இன்று களமிறங்குகிறது. கடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 32-25 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இது ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் தமிழ் தலைவாஸ் அணியின் எட்டாவது வெற்றியாகும்.


அதேபோல், கடந்த பிப்ரவரி 7 ம் தேதி நடைபெற்ற பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 40-31 என்ற கணக்கில் புனேரி பல்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.


தமிழ் தலைவாஸ் vs புனேரி பல்டன்ஸ் அணிகளி இதுவரை நேருக்குநேர்: 


ப்ரோ கபடி லீக் வரலாற்றில் தமிழ் தலைவாஸ் அணியும், புனேரி பல்டன்ஸ் அணியும் இதுவரை 10 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. அதில், அதிகபட்சமாக புனேரி பல்டன்ஸ் அணி 5 முறையும், தமிழ் தலைவாஸ் அணி 3 முறையும் வெற்றிபெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் டையில் முடிந்துள்ளது. 


ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்டன் அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டியில் புனேரி புல்டன்ஸ் அணி 29-26 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. 


ப்ரோ கபடி லீக் சீசன் 10 புள்ளிகள் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 19 போட்டிகளில் விளையாடி, 8ல் வெற்றி பெற்று 11ல் தோல்வி அடைந்துள்ளது. இதன்மூலம், 45 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. அதேபோல், புனேரி பல்டன்ஸ் அணி 13ல் வெற்றி, 2ல் தோல்வி, 3 போட்டிகளில் டை செய்துள்ளதால் 76 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 


இன்று படைக்கவிருக்கும் ரெக்கார்ட்கள்:


தமிழ் தலைவாஸ் அணியின் நரேந்தரின் ப்ரோ கபடி லீக் வரலாற்றில் 400 ரெய்டு புள்ளிகளை எட்ட இன்னும் 6 ரெய்டு புள்ளிகள் மட்டுமே தேவையாக உள்ளது.


இரு அணிகளின் விவரம்: 


தமிழ் தலைவாஸ்  : அஜிங்க்யா பவார், சாகர் ரதி (கேப்டன்), ஹிமான்ஷு, ஜதின், ஹிமான்ஷு சிங், செல்வமணி கே, ஹிமான்ஷு, எம் அபிஷேக், சாஹில், மோஹித், ஆஷிஷ், நரேந்தர், அமீர்ஹோசைன் பஸ்தாமி, முகமதுரேசா கபௌத்ரஹாங்கி, ரித்திக், மசன்முது


புனேரி பல்டன்ஸ் : அபினேஷ் நடராஜன், கௌரவ் காத்ரி, சங்கேத் சாவந்த், பங்கஜ் மோஹிதே, அஸ்லாம் இனாம்தார் (கேப்டன்), மோஹித் கோயத், ஆகாஷ் ஷிண்டே, பாதல் சிங், ஆதித்யா ஷிண்டே, முகமதுரேசா ஷட்லூயி சியான்னே, வஹித் ரெசைமெர், ஹர்தீப் எஹமத் முஸ்தா


கணிக்கப்பட்ட இரு அணிகள் விவரம்:


தமிழ் தலைவாஸ் : சாஹில் குலியா (கேப்டன்), மோஹித், அமிஹோசைன் பஸ்தாமி, எம் அபிஷேக், நரேந்தர், ஹிமான்ஷு நர்வால், விஷால் சாஹல்


புனேரி பல்டன் : அஸ்லாம் இனாம்தார் (கேப்டன்), மோஹித் கோயத், ஆகாஷ் ஷிண்டே, முகமதுரேசா ஷட்லு, கௌரவ் காத்ரி, அபினேஷ் நடராஜன், சங்கேத் சாவந்த்


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.