Pro Kabaddi 2022: ப்ரோ கபடி லீக்கின் 9வது சீசனில் விளையாடி வரும் தபாங் டெல்லி அணியைச் சேர்ந்த ரைடர் நவீன் குமார் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.  


ப்ரோ கபடி லீக்கின் 9வது சீசன் கடந்த சனிக்கிழமை அதாவது அக்டோபர் மாதத்தின் 7-ஆம் தேதி தொடங்கியது. 12 அணிகள் களமிறங்கியுள்ள இந்த சீசனில் இதுவரை 12 போட்டிகள் நடைபெற்றுள்ளது. ஆறு அணிகள் தலா மூன்று போட்டிகளிலும், ஆறு அணிகள் தலா இரண்டு போட்டிகளிலும் விளையாடியுள்ளது. மூன்று போட்டிகளில் இது வரை விளையாடியுள்ள தபாங் டெல்லிஅணி தோல்வியைச் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சீசனில் முதல் ஹாட்ரிக் வெற்றியையும் பெற்றூள்ளது. மிகவும் பலம் வாய்ந்த அணியாக உள்ள தபாங் டெல்லி அணியைப் பொறுத்தவரை பலரது கணிப்பிலும் இந்த சீசனின் டைட்டிலை வெல்லும் அணியாக உள்ளது. 


கடந்த 10 தேதி நடந்த போட்டியில், தபாங் டெல்லி அணி  பலமான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர் கொண்டது. இந்த போட்டியில் விளையாடிய தபாங் டெல்லிஅணியின் முக்கிய வீரரும் ஸ்டார் ரைடருமான நவீன் குமார் ப்ரோ கபடி லீக்கில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். இந்த போட்டியில் மொத்தம் 12 ரைய்டுகள் சென்ற இவர், மூன்று போனஸ் உட்பட 15 புள்ளிகள் எடுத்தார். இதன் மூலம், மிகக் குறைந்த போட்டியில் அதிக ரெய்டு பாண்ய்ட்களை எடுத்த வீரர் எனும் சிறப்பினைப் பெற்றுள்ளார். இந்த போட்டியில் இவர் எடுத்த 15 ரெய்டு பாய்ண்டுகள் மூலம், 700 ரெய்டு பாய்ண்டுகளை எட்டியுள்ளார்.  22 வயதே ஆன நவீன் குமார் கடந்த ப்ரோ கபடி லீக் சீசன் 6ல் இருந்து டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடந்த போட்டி இவரது 64வது போட்டியாகும்.


இதற்கு முன்னர்,  71 போட்டிகளில் 700 ரெய்டு பாய்ண்டுகளை தற்போது யுபி யோதாஸ் அணிக்காக விளையாடி வரும் பிரதீப் நார்வால் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது சாதனையை மிகவும் இளம் வீரரான தபாங் டெல்லி அணியின் நவீன் குமார் சமன் செய்துள்ளார். 






நேற்று நடந்த மற்றொரு போட்டியில் தபாங் டெல்லி அணியின் நவீன் குமார் யுபி யோதாஸ் அணிக்கு எதிராக 7 ரெய்டுகளில் 6 போனஸ் புள்ளிகள் உட்பட 13 ரெய்டு பாய்ண்டுகளை எடுத்தார். இதன் மூலம் 65 போட்டிகளில் 713 ரெய்டு பாய்ண்டுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த போட்டியில் டெல்லி அணி யுபி அணி வென்றது.