நான்கு முறை உலக செஸ் சாம்பியன் போட்டியில் வென்ற மாக்னஸ் கார்ல்சன், பிரக்ஞானந்தாவின் 'பி' அணியை கண்டு அஞ்சுவதாக தெரிவித்துள்ளார். 


சமீபத்தில், இணைய செஸ் சாம்பியன் போட்டியில், தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா நான்கு முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார். இதனால், உலகத்தின் கவனம் பிரக்ஞானந்தாவை நோக்கி திரும்பியது. இந்நிலையில், ஜூலை 28ஆம் தேதி, மாமல்லபுரத்தில் தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தயாராகி வரும் மாக்னஸ் கார்ல்சல் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.


தி டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில், பிரக்ஞானந்தா தலைமையிலான இந்தியா 'பி' மீது பெரும் மதிப்பு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "என்னை பிரக்ஞானந்தா இரண்டு முறை வீழ்த்தியுள்ளார். இருப்பினும், அவருக்கு எதிராக பிளஸ் ஸ்கோரை எடுத்துள்ளேன். அவர் ஒரு திறமையான இளம் வீரர். பிரக்ஞானந்தா, குகேஷ், ரவுனக் சத்வானி, பி. அதிபன், நிஹல் சரின் ஆகியோர் இடம்பெற்றுள்ள இந்திய 'பி' அணி ஒலிம்பியாட் போட்டியில் பதக்கத்தை வெல்வதற்கு முக்கிய போட்டியாளராக கருதபடுகிறது. 


பி. ஹரிகிருஷ்ணா, விதித் குஜ்ராதி, கே. சசி கிரண் ஆகியோர் இந்திய 'ஏ' அணியில் இடம்பெற்றுள்ளனர். இது தொடர்பாக விரிவாக பேசிய அவர், "இளம் வீரர்கள் கொண்ட இந்திய 'பி' அணியே ஆபத்தானது. அவர்கள் மிக வலுவாக உள்ளார்கள் என எண்ணுகிறேன். உண்மையை சொல்ல வேண்டுமானால், இந்திய ஏ அணியை விட இந்திய பி அணியை கண்டே அஞ்சுகிறேன்" என்றார்.


மாமல்லபுரத்தில் 188 நாடுகள் கலந்துகொள்ளும் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மிக பிரம்மாண்டமாக நடைபெறும். சர்வதேச சதுரங்க போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு போட்டியிட உள்ளார்கள்.


இதன் தொடக்க போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


அனைத்து கட்டுமானங்களையும் புதுப்பிக்கும் பணிகளில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண