முதல்முறையாக உலகக்கோப்பையில் 2வது சுற்றுக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த தென் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் நுழைந்துள்ளது.
போர்ச்சுக்கலை வீழ்த்திய தென்கொரியா:
முதல்முறையாக உலகக் கோப்பையில் 2ஆவது சுற்றுக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த தென் கொரியா அணி நுழைந்தது. உலகக் கோப்பை கால்பந்தில் தென் கொரியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.
நேற்று இந்த ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது போர்ச்சுகல் கேப்டனும் நட்சத்திர வீரருமான ரொனால்டோ தென் கொரிய வீரருடன் வார்த்தைப் போரில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரொனால்டோ, “மாற்று வீரராக இருந்தபோது அது நடந்தது. கொரிய வீரர் என்னை விரைவாக வெளியேறச் சொன்னார். நான் அவரை அமைதியாக இருக்கச் சொன்னேன். ஏனெனில், என்னை விரைவில் வெளியேற சொல்ல அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது" என்றார்.
ரொனால்டோ கோபம் ஏன்..?
இதுகுறித்து போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸ் பேசுகையில், “கொரிய வீரர் மீது ரொனால்டோ கோபமாக இருந்ததை அனைவரும் பார்த்தனர். அவரை ஆடுகளத்தை விட்டு கொரிய வீரர் வெளியேறச் சொன்னார். அதனால்தான் அவர் கோபமடைந்தார். எல்லோரும் அதைப் பார்த்தார்கள். நான் கொரிய வீரருடனான உரையாடலைப் பார்த்தேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறியுள்ளார்.
மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், போட்டி தொடங்கிய 5வது நிமிடத்திலேயே போர்சுகல் வீரர் ஹோர்ட்டா கோல் அடித்தார். தென் கொரியா 27வது நிமிடத்தில் கோல் அடித்தது. இதனால் ஆட்டம் சமனில் இருந்தது.
பின்னர் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் தென் கொரிய வீரர் ஹீ சான் அசத்தலான கோல் அடிக்க 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரிய அணி முதல் வெற்றியை ருசித்தது. இந்த அசத்தல் வெற்றியின் மூலம் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தென் கொரிய அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அந்த அணி 5 முறை சாம்பியனான பிரேசில் அணியை டிசம்பர் 6-ஆம் தேதி எதிர்கொள்கிறது.
உலகக்கோப்பை கால்பந்து:
22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று முதல் 2ஆவது சுற்று ஆட்டம் தொடங்க உள்ளது.
இன்று முதல் 2ஆவது சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை. கடைசியாக 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தப் போட்டி டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டியான இதில் 32 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன.