உலகளவில் நம்பர் 1 கால்பந்து ரசிகராக வலம் வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவருக்கென்று உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் மான்செஸ்டர் யூனிடட் அணிக்காக ஆடி வருகிறார். இந்த நிலையில், எவர்டனில் நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் அணி தோல்வி அடைந்தது.


அந்த விரக்தியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மைதானத்தை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது, மைதானம் முழுவதும் இருந்த ரசிகரகள் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர்.






அப்போது. ரொனால்டோ தனது அணியினர் அறைக்கு செல்லும் வழியில் இருந்த பாதையிலும் ரசிகர்கள் ஆரவாரம் செய்துகொண்டிருந்தனர். அப்போது, அங்கே நின்று கொண்டிருந்த ஒரு சிறுவன் ரொனால்டோவிற்கு கையை காட்டினான். ஆனால், தோல்வியடைந்த கோபத்தில் இருந்த ரொனோல்டோ சிறுவனின் கையில் இருந்த செல்போனை ஆவேசமாக தட்டினார். இதில், கீழே விழுந்த செல்போன் அதே இடத்தில் நொறுங்கியது. இந்த சம்பவத்தை அங்கே இருந்த பலரும் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.






இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ரொனால்டோ தனது இன்ஸ்டாகிராமில் மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நாம் எதிர்கொள்ளும் கடினமான தருணங்களில் உணர்ச்சிகளைக் கையாள்வது எளிதல்ல. ஆயினும்கூட, நாம் எப்போதும் மரியாதையுடனும், பொறுமையுடனும் இருக்க வேண்டும் மற்றும் அழகான விளையாட்டை விரும்பும் அனைத்து இளைஞர்களுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும்,


எனது கோபத்திற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன், முடிந்தால், இந்த ஆதரவாளரை நியாயமான விளையாட்டு மற்றும் விளையாட்டுத்திறன் ஆகியவற்றின் அடையாளமாக ஓல்ட் ட்ராஃபோர்டில் ஒரு ஆட்டத்தைப் பார்க்க அழைக்க விரும்புகிறேன்.”


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


ரொனால்டோவின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தாலும், அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியதால் ரொனால்டோவை பலரும் பாராட்டியும் வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண