ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனின் 108வது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் யு.பி. யோதாஸ் அணியும் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 32 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. யு.பி. யோதாஸ் அணி 25 புள்ளிகள் எடுத்தது. இந்த சீசனில் இரு அணிகளும் இதற்கு முன்னர் மோதிக்கொண்டதில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றிருந்தத நிலையில், தமிழ் தலைவாஸ் அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று யு.பி. யோதாஸ் அணிக்கு எதிராக தனது ஆதிக்கத்தை தொடர்ந்து வருகின்றது. இந்த வெற்றியின் மூலம் தலைவாஸ் அணி புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டியில் தலைவாஸ் அணி ரெய்டு புள்ளிகள் மட்டும் 15 புள்ளிகளும், டிஃபெண்டிங்கில் 14 புள்ளிகளும் எடுத்தது. இதுமட்டும் இல்லாமல் தமிழ் தலைவாஸ் அணி யு.பி யோதாஸ் அணியை ஒரு முறை ஆல் அவுட் செய்தது. இதன் மூலம் தலைவாஸ் அணிக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்தது. இதுமட்டும் இல்லாமல் தமிழ் தலைவாஸ் அணிக்கு போனஸில் ஒரு புள்ளி கிடைத்தது.
அதேபோல் யு.பி யோதாஸ் அணிக்கு ரெய்டுகளில் மட்டும் 13 புள்ளிகளும் டிஃபெண்டிங்கில் 10 புள்ளிகளும் எடுத்தது. இதுமட்டும் இல்லாமல் போனஸ் புள்ளிகள் இரண்டு புள்ளிகள் கிடைத்தது. மொத்தத்தில் யு.பி. யோதாஸ் அணி 25 புள்ளிகள் எடுத்தது. இதனால் இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 7 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் தலைவாஸ் அணி புள்ளிப் பட்டியலில் 10வது இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு முன்னேறியது.
இந்த வெற்றியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணி தனது ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கின்றது.