PKL Tamil Thalaivas: மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா “தமிழ் தலைவாஸ்”? - ஜெய்ப்பூருடன் இன்று பலப்பரீட்சை..!

PKL Tamil Thalaivas: புரோ கபடி லீக்கின் 10வது சீசனில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்கள் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

Continues below advertisement

PKL Tamil Thalaivas: புரோ கபடி லீக்கின் 10வது சீசனில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் வென்று,  தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Continues below advertisement

புரோ கபடி லீக்:

மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் ப்ரோ கபடி லீக் சீசன் 10 ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மொத்தம் 12 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் நாட்டின் வெவ்வேறு நகரங்களில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதில் தற்போது வரை 35 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. தற்போது சென்னையில் லீக் சுற்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.

சென்னை - ஜெய்ப்பூர் மோதல்:

நேரு மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் புள்ளிப்பட்டியலில், நான்காவது இடத்தில் உள்ள ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை 12வது இடத்தில் உள்ள தமிழ் தலைவாஸ் அணியை எதிர்கொள்கிறது. 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் உ.பி., யோதாஸ் அணிகள் மோதுகின்றன. போட்டிகளின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஒடிடியில் ஹாட் ஸ்டார் தளத்திலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

நேருக்கு நேர் புள்ளி விவரங்கள்:  

ஜெய்ப்பூர் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் இதுவரை 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஜெய்ப்பூர் அணி 6 முறையும், தமிழ் தலைவாஸ் அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. இந்நிலையில் இன்றைய போட்டியில் வென்று, ஜெய்ப்பூர் அணியுடனான வெற்றிக் கணக்கை அதிகரிக்க தமிழ் தலைவாஸ் அணி ஆர்வம் காட்டுகிறது.

ஜெய்ப்பூரை சமாளிக்குமா தமிழ் தலைவாஸ்:

ஜெய்ப்பூர் அணி கடைசியாக விளையாடிய லீக் போட்டியில், உ.பி. யோதாஸ் அணியை 41-24 என்ற புள்ளிக் கணக்கில் துவம்சம் செய்தது. அதே உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் களமிறங்க உள்ளது. மறுமுனையில் தமிழ் தலைவாஸ் அணி கடைசியாக விளையாடிய போட்டியில் பாட்னா பைரேட்ஸிடம் 33-46 என்ற கணக்கில் தோல்வியை தழுவியுள்ளது. இதுவரை மொத்தமாக 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி மற்றும் 3 தோல்விகளை தமிழ் தலைவாஸ் அணி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அணியின் பலவீனம்:

தமிழ் தலைவாஸ் அணி ரெய்டில் அதிக பாயிண்ட்ஸ்களை எடுத்தாலும், டேக்கில் பிரிவில் குறைவான பாயிண்ட்களை எடுத்து வருகிறது. உதாரணமாக பாட்னா அணிக்கு எதிரான போட்டியில் ரெய்டில் 21 புள்ளிகளை எடுத்தாலும், டேக்கிலில் மொத்தம் 9 புள்ளிகளை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தினால், இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

அணி விவரம்:

அஜிங்க்யா பவார், நரேந்தர், செல்வமணி கே, விஷால் சாஹல், ஹிமான்ஷு நர்வால், ஹிமான்ஷு சிங், நிதின் சிங், ஜதின், சதீஷ் கண்ணன், மாசானமுத்து லக்ஷனன், எம் அபிஷேக், ஹிமான்ஷு, சாகர், ஆஷிஷ், மோஹித், சாஹில் குலியா, அமீர்ஹோசைன் பஸ்தாமி, ரோன், முகமதுரேசா கபௌத்ரஹங்கி, மற்றும் ரித்திக்

Continues below advertisement
Sponsored Links by Taboola