ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. 14-வது ஐபில் கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் இன்றியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் இன்று நடைபெற உள்ள 26-வது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. நடப்புத் தொடரில் இரு அணிகளும் 6 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. இதில், பஞ்சாப் 2 வெற்றிகளும், பெங்களூரு 5 வெற்றிகளும் பெற்றுள்ளன.
2021 ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கி சென்றுகொண்டிருக்கும், கோலியின் படை சென்னை அணியிடம் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணியில் டி வில்லியர்ஸ் பயங்கர ஃபார்மில் இருக்கிறார். ஒவ்வொரு ஆட்டத்திலும் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து கொடுத்து வருகிறார். மேலும், மேக்ஸ்வெல், தேவ்தத் படிக்கல் ஆகியோரும் நன்றாக விளையாடி வருகின்றனர். கோலி சில ஆட்டங்களில் சொதப்பினாலும், அவர் நன்றாக ஆடுவதையே விரும்புவார். இவர்களை எல்லாம் கட்டுப்படுவதில் பஞ்சாப் அணி பந்துவீச்சாளர்கள் கையில் உள்ளன. பவுலிங்கில் சிராஜ், ஹர்ஷல் பட்டேல் நன்றாக செயல்படுகின்றனர். ஒட்டுமொத்தமாக பெங்களூர் அணி வலுவலாக உள்ளது.
பஞ்சாப் அணி கடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோல்வியை தழுவியது. அந்த அணியில் கேப்டன் கே.எல்.ராகுல், ஷாருக்கான், கெயில் மட்டுமே இதுவரை நன்றாக ஆடியுள்ளனர். நிக்கோலஸ் பூரான் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அவருக்கு பதிலாக இன்றைய ஆட்டத்தில் டேவிட் மாலன் களமிறங்க வாய்ப்பிருக்கிறது. பந்துவீச்சில் ஷமி மட்டுமே நம்பிக்கை அளிக்கிறார். பலம்பொருந்திய பெங்களூர் வீழ்த்த ஒட்டுமொத்த அணி ஒருங்கிணைந்து விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

The only rule of this royal clash is that there are no rules ⚔️#SaddaPunjab #PunjabKings #IPL2021 #PBKSvRCB pic.twitter.com/kHRTl54aMI
— Punjab Kings (@PunjabKingsIPL) April 30, 2021

இன்றைய போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கவேண்டும் என்ற முனைப்புடன் பெங்களூர் அணியும், பட்டியலில் 4-வது இடம் பிடிக்கவேண்டும் என்றால், கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என பஞ்சாப் அணியும் இருக்கும். இதனால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என நம்பலாம். இரு அணிகள் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், பஞ்சாப் அணி 14-இல் வெற்றி பெற்றுள்ளன. பெங்களூர் அணி 12-ல் வெற்றி பெற்றுள்ளன.