கொரோனா தடுப்பூசிக்கான விலையை தனியார் நிறுவனங்களே நிர்ணயிப்பதை அனுமதிக்க முடியாது. தடுப்பூசி திட்டம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Continues below advertisement


கொரோனா தடுப்பூசி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா தடுப்பூசி விலையை தனியார் நிறுவனங்களே நிர்ணயித்தால் சமநிலைத்தன்மை இருக்காது. எனவே, தடுப்பூசிக்கான விலையை தனியார் நிறுவனங்களே நிர்ணயிப்பதை அனுமதிக்க முடியாது.தடுப்பூசி திட்டம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து கூறியது. மேலும், தனியார் நிறுவனங்கள் நிர்ணயித்தால் தடுப்பூசியின் விலை எப்படி ஒரே மாதிரியாக இருக்கும் என்று கேள்வி எழுப்பியது.


அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், கூடுதலான தடுப்பூசிகளை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் படுக்கை, ஆக்சிஜன் உதவி கோருவதை மாநில அரசுகள் தடுக்கக் கூடாது என்றும் கூறியது.