குரூப்-1 பிரிவில் அரசுப் பணி வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக நாடு திரும்பிய மாரியப்பன் தங்கவேலு கூறினார்.


டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு இன்று தாயகம் திரும்பினார். டெல்லி விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய சுகாதரத்துறை அமைச்சரை சந்திக்க இன்று டெல்லி சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமான நிலையத்தில் மாரியப்பனுக்கு வரவேற்பு அளித்தார்.






 


விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாரியப்பன், “தங்கத்தை இலக்காக கொண்டு சென்றேன். மழைப் பிரச்னை காரணமாக வெள்ளி வெல்ல முடிந்தது. அடுத்த பாராலிம்பிக்கில் நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வேன்” என்று கூறினார். மேலும், குரூப்-1 பிரிவில் அரசுப் பணி வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன். மற்ற வீரர்களுக்கு அரசுப் பணி வழங்கியது போல் எனக்கும் வழங்க வேண்டும்” என்றும் கூறினார். 


டோக்கியோ பாராலிம்பிக்கில் கடந்த 31ஆம் தேதி தமிழ் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த உயரம் தாண்டுதல் போட்டி  நடைபெற்றது. இதில், மாரியப்பனுக்கு வெள்ளிப்பதக்கமும் ஷரத் குமாருக்கு வெண்லகப் பதக்கமும் கிடைத்தது. தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்ற பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்று மாரியப்பன சாதனைப் படைத்தார்.


போட்டி தொடங்கியவுடன், மாரியப்பன் தங்கவேலு மற்றும் ஷரத் குமார் ஆகிய இருவரும் 1.73 மீ, 1.77 மீ, 1.80 மீ, 1.83 மீ தூரங்களை முதல் வாய்ப்பிலையே தாண்டி க்ளியர் செய்தனர். பதக்கத்திற்காக இரு இந்திய வீரர்கள் இடையே கடும்போட்டி நிகழ்ந்தது. போட்டியின் நடுவே மழை வேறு குறிக்கிட்டதால் வீரர்கள் முழுமையாக சிறப்பாக செயல்பட முடியாத நிலைமை ஏற்பட்டது.


தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், 1.86 மீட்டர் தூரத்தை மூன்றாவது வாய்ப்பில் மாரியப்பன் க்ளியர் செய்தார். அமெரிக்காவைச் சேர்ந்த கிரேவ் சாமுக்கும் மாரியப்பனுக்கும் சவாலான போட்டி இருந்தது. ரியோ பாராலிம்பிக்கில் மாரியப்பன் 1.89 மீ தாண்டி தங்கப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 1.88 மீட்டர் தூரத்தை அமெரிக்க வீரர் க்ளியர் செய்த்ததால், மாரியப்பனுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.மற்றொரு இந்திய வீரரான ஷரத் 1.83 மீட்டர் தூரம் க்ளியர் செய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். 


இதனைத் தொடர்ந்து, பாராலிம்பிக்கில் வெள்ளி வென்றதற்காக மாரியப்பனுக்கு தமிழக அரசு ரூபாய் 2 கோடி பரிசாக அறிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் மாரியப்பனை பாராட்டினார். இதேபோல், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனும் மாரியப்பனை தொலைபேசியில் பாராட்டினார். 


Mariappan | சின்ன சின்ன அன்பில்தானே.. மாரியை தோளில் சுமந்த சந்தீப் - நெகிழ்ச்சி வீடியோ!