இந்தியாவில் நடந்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023ல் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடு காரணமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை தேர்வாளர் பதவியில் இருந்து முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் விலகுவதாக கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி அறிவித்தார்.


சொதப்பிய பாகிஸ்தான் அணி:


முன்னதாக பாகிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து சொதப்பியது. அதன்படி, அந்த அணி விளையாடிய 8 போட்டிகளில்  4 போட்டிகளில் தோல்வி அடைந்தது. இந்தியா , ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி நெதர்லாந்து, இலங்கை, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் வெற்றி பெற்றது. ஆனால், பீல்ட்டிங்கில் கடுமையாக சொதப்பியது.


இதனால் கேப்டன் பாபர் அசாமிற்கு மட்டுமின்றி, தேர்வுக்குழு தலைவரான இன்சாமாமிற்கும் அந்நாட்டு ரசிகர்கள் தரப்பில் கடும்  எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், இன்சமாம் உல் ஹக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி அறிவித்தார்.


முன்னதாக,  உலகக் கோப்பைக்கான வீரர்களை தேர்வு செய்ததில், தவறு நடந்து இருப்பதாக இன்சமாம் உல் ஹக் மற்றும் பாபர் அசாமிற்கு எதிராக ஊடகங்களில் செய்தி வெளியாகின. ஆனால், அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐந்து பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்து, அணித் தேர்வு செயல்முறை தொடர்பான ஊடகங்களில் வெளியான நலன் முரண்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தரவிட்டது.


ராஜினாமா கடிதம் ஏற்பு:


இச்சூழலில் தான் இன்சமாம் உல் ஹக்கின் ராஜினாம கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக பிசிபி  (பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்) இன்று (நவம்பர் 9) தெரிவித்துள்ளது.  மேலும் தலைமை தேர்வாளருக்கான மாற்றீடு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக பிசிபி வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தேசிய ஆடவர் தேர்வுக் குழு மற்றும் ஜூனியர் தேர்வுக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து இன்சமாம் உல் ஹக் ராஜினாமா செய்ததை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது. அவருக்கு பதிலாக புதிதாய் நியமிக்கப்படுபவர் யார் என்று விரைவில் தெரிவிக்கப்படும்” என்று கூறியுள்ளது. 


இதனிடையே, தலைமை தேர்வாளராக இருந்த இன்சமமின் ஒப்பந்தத்தை  ரத்து செய்வது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. , இன்சாமாமின் பதவிக்காலம் முடியும் முன்பே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால், பாகிஸ்தான் கிரிக்கெட்ர் வாரியம் அந்நாட்டு ரூபாய் மதிப்பில் 15 மில்லியன் டாலர்களை அவருக்கு கொடுக்க வேண்டியதாக இருக்கும்.  இது ஆறு மாதங்களுக்கு ஒதுக்கப்படும் 2.5 மில்லியன் மாத சம்பளத்திற்கு சமமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: World Cup 2023: இது புதுசு! கீரிஸில் அவுட்டாகாமல் நீண்டநேரம்.. மேலும் ஒரு சாதனை பட்டியலில் இணைந்த விராட் கோலி..!


மேலும் படிக்க: World Cup Points Table: அதிகாரப்பூர்வமாக வெளியேறிய நெதர்லாந்து.. புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து இந்தியா முதலிடம்.. புள்ளிப்பட்டியல் நிலவரம்!