பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற் பாகிஸ்தான் முதலில் பெளவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களங்மிறங்கிய விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் குவித்தது.

Continues below advertisement

இதையடுத்து, பாகிஸ்தான் அணி களமிறங்கி விளையாடியது. ஓபனின் பேட்ஸ்மேன் ஃபாக்கர் ஜாமன் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். இந்தப் போட்டியில், 50.1  ஓவர் வரை நின்று ஆடிய அவர் 155 பாலில்  193 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இதில் 18 பவுண்டரிகளும், 10 சிக்சர்களும் அடங்கும். இதன்மூலம், சேஸிங்கில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை ஃபாக்கர் ஜாமன் படைத்தார்.

Continues below advertisement

இந்தப் போட்டியில், இவரை தவிர மற்ற வீரர்கள் சரியாக விளையாடததால், பாகிஸ்தான் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. கடைசி வரை போராடிய ஃபாக்கர் ஜாமன் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

🏏 193 runs
⚪ 155 balls
🔥 18 fours and 10 sixes

What an exceptional knock from @FakharZamanLive 🙌

It is also the highest individual score at the Wanderers!#SAvPAK | https://t.co/xcauK7pG9h pic.twitter.com/L5jcrcSIDf
— ICC (@ICC) April 4, 2021

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சேஸிங்கில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் 185*, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 183, இன்னாள் கேப்டன் விராட் கோலி 183 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது. தற்போது, இவர்களின் சாதனை  ஃபாக்கர் ஜாமன் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.