சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாகவும், பார்மில் பின்வடையையும் சந்திந்து வரும் நிலையில், தற்போது பாகிஸ்தான் அணியில் சக வீரரின் பெண் தோழியிடம் தவறாக பேசியதாக பாபர் அசாம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


உலக கிரிக்கெட்டில் தற்போது மிகவும் பிரபலமான பெயர்களில் ஒன்று பாபர் அசாம். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தற்போது மூன்று விதமான போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி கடந்த 2021ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கும், நடந்து முடிந்த 2022ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இறுதி போட்டிக்கும் சென்றது. 


இப்படி ஒருபுறம் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டாலும், சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கிலும், நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் டிரா மற்றும் ஒருநாள் தொடரை இழந்தது. இதையடுத்து, மூன்று விதமான போட்டிகளில் இருந்து பாபர் அசாம் நீக்கப்பட வேண்டும் என்று விமர்சனம் எழுந்தது. 


அதனைதொடர்ந்து, டெஸ்ட் தொடருக்கு ஷான் மசூத்தையும், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு சதாப் கான் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. இப்படியாக சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாகவும், பார்மில் பின்வடையையும் சந்திந்து வரும் நிலையில், தற்போது பாகிஸ்தான் அணியில் சக வீரரின் பெண் தோழியிடம் தவறாக பேசியதாக பாபர் அசாம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 






அந்த பெண்ணிடம் பாபர் அசாம், உன்னுடைய காதலன் அணியில் இருக்க வேண்டும் என்றால், என்னுடன் இதுபோல் தொடர்ந்து பேச வேண்டும் என மிரட்டியுள்ளார். அதை அந்த பெண் வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு நியாயம் கேட்டுள்ளார். தற்போது, பாபர் அசாம் அரைகுறை ஆடையுடன் இருக்கும் போட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


தற்போதுவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் இருந்து எந்தவித பதிலும் தரப்படவில்லை. இதையடுத்து, பாபர் அசாமின் இமேஜை கெடுக்கவே இப்படியான பொய்களான செய்திகள் பரவுகிறது என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 






ஏற்கனவே இதே வழக்கில் சிக்கிய பாபர்..


கடந்த 2022ம் ஆண்டு பாபர் ஆசாம் பெண் விவகாரத்தில் சிக்கினார். ஹம்சா முக்தர் என்ற பெண் கடந்த ஆண்டு பாபர் அசாமினால் கருவுற்றதாக கூறப்படுகிறது. இதற்காக அந்த பெண் பாபரிடம் நியாயம் கேட்டபோது கொன்று விடுவதாக மிரட்டியதாகவும், தன்னிடம் இருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளதாக கூறப்பட்டது. அதன்பிறகு இந்த விவகாரம் வெளியே வர அதற்கான தொகையை கொடுத்து விடுவதாகவும் பாபர் மீது புலனாய்வுத் துறையில் புகார் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.