நாடு முழுவதும் மாட்டுப் பொங்கல் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டத்திலும் விவசாயிகள் மாட்டுப்பொங்கலை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். உழவுக்கு உதவி செய்யும் உற்ற நண்பனாக விளங்கும், மாடுகளுக்கு நன்றி செலுத்தும் திருநாளாக மாட்டுப்பொங்கல் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த வாணதிராஜபுரத்தில், கோசாலை அமைந்துள்ளது. ஆதரவற்று திரியும் மாடுகள், பால் அற்றுப்போய், அடிமாட்டிற்கு விற்கப்படும் மாடுகள், முதுமையடைந்த மாடுகள் உள்ளிட்ட ஆதரவற்ற மாடுகள் இங்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. 500 -க்கும் மேற்பட்ட மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று அங்கு மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாடுகளுக்கு கோபூஜை விழா நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் மாடுகளுக்கு பூஜை மற்றும் தீபாராதனை செய்து , வணங்கி உணவு அளித்து வழிபாடு நடத்தினர்.
இதேபோன்று மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கோசாலையில் மாட்டுப்பொங்கல் விழாவில், யாகம் வளர்த்து மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி வடகரையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதான்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்ட ஏராளமான மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு மாட்டுப்பொங்கல் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாடுகள் குளிப்பாட்டப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. மகாகணபதி, கோ லட்சுமி யாகம் நடைபெற்று பூரணாகுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து பசுமாட்டிற்கு லட்சுமி பூஜை நடைபெற்று. பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் மாடுகளை வணங்கி பொதுமக்கள் கூட்டு பிரார்த்தனை செய்து வழிபாடு செய்தனர். பூஜைகளை பாலச்சந்திர சிவாச்சாரியார் செய்வித்தார்.
மயிலாடுதுறையில் காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு போலீசார் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.. ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுரை:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா ஜனவரி 11-ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை ஒரு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையம் பகுதியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா தலைமையில் காவல்துறையினர் துண்டு பிரசுரங்களை வழங்கி ஹெல்மெட் அணிந்து வர பொதுமக்களை வலியுறுத்தினர்.
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை வலியுறுத்தியும் சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா வழங்கி ஜெலமேட் அணிந்துவர வலியுறுத்தினார். ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இணிப்பு மற்றம் பேனா வழங்கி பாராட்டு தெரிவித்தார். தொடாந்து தஹல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போலீசார் நடத்திய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்பணர்’வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் மற்றும் காவல் ஆய்வாளர்கள் செல்வம் சதீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.