ஃபின்லாந்தின் டாப் டிராக் அண்ட் ஃபீல்டு போட்டியில் கடந்த ஆண்டு 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா தனது முந்தைய தேசிய சாதனையான 87.58 மீட்டரை முறியடித்து 89.30 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 


கோடையில் ஃபின்லாந்தின் டாப் டிராக் அண்ட் ஃபீல்டு போட்டியான பாவோ நூர்மி கேம், கடந்த 1957 முதல் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த போட்டியானது கான்டினென்டல் டூர் கோல்ட் மீட் ஆகும், இது ஒரு உயர்மட்ட உலக தடகள போட்டியாகும். 






 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் தங்கம் வென்ற தங்கமகன் நீரஜ் சோப்ரா இந்த தொடரில் 10 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக களமிறங்கினார். தனது எறிந்த முதல் முயற்சியில் 86.92 மீட்டர்களும், இரண்டாவது முயற்சியில் 89.30 மீட்டர் தூரம் எறிந்தார். இவரது மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது முயற்சிகள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது. இறுதியில் அவர் 85.85 மீட்டர் தூரம் எறிந்து முடித்தார்.


நீரஜ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு தனது முதல் சர்வதேசப் போட்டியில் 89.30 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடம் பிடித்தார். பின்லாந்தின் ஆலிவர் ஹெலாண்டர் 89.93 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தை வென்றார். நடப்பு உலக சாம்பியனான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 86.60 மீட்டர் தூரம் எறிந்து 3வது இடத்தை பிடித்தார்.






இதன்மூலம், இந்தப் போட்டியில் இரண்டாவது இடம் பிடித்த நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண