ப்ரோ கபடி லீக் 10வது சீசனில் நேற்று தமிழ் தலைவாஸ் அணி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்கொண்டது. ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை 42-29 என்ற புள்ளி கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வென்றது. இதன்மூலம், தமிழ் தலைவாஸ் அணி தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்து தனது மோசமான பார்மை தொடர்கிறது. 


ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி போட்டியின் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி 5-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பிற்கு எழுச்சியுற்ற தமிழ் தலைவாஸ் அணி இரண்டு சூப்பர் டேக்கிள் மூலம் 11வது நிமிடத்தில் 6-7 என முன்னிலை பெற்றனர். 


தமிழ் தலைவாஸுக்கு வினயான வினய்:


அப்போது, ஹரியானாவை சேர்ந்த வினய் சிறப்பாக ரெய்டு செய்து தனது அணியை 14-7 என்ற கணக்கில் முன்னிலைக்கு கொண்டு சென்றார். ஹரியானா அணியின் வலுமான டிபெண்ட்ஸ் டீமை உடைத்து ரெய்டு மூலம் ஹிமான்ஷு சிங், தமிழ் தலைவாஸ் அணிக்காக பாயிண்ட்ஸ்களை எடுக்க தொடங்கினார். முதல் பாதியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் 18 புள்ளிகளையும், தமிழ் தலைவாஸ் 12 புள்ளிகளையும் பெற்றது. 


இரண்டாவது பாதியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஹரியானா அணி  5 நிமிடங்களில் ஸ்டீலர்ஸ் 35-22 என முன்னிலை வகித்தது. தோல்வியைக் தவிர்க்க தமிழ் தலைவாஸ் தங்களால் இயன்றவரை முயன்றது. இருப்பினும், கடைசியில் ஹரியானா அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. 






ஹிமான்ஷு சிங்கும், சாஹில் குலியா மட்டுமே..


இருப்பினும், தமிழ் தலைவாஸ் அணியின் நம்பிக்கையாக ஜொலித்தவர்கள் ஹிமான்ஷு சிங்கும், சாஹில் குலியா மட்டுமே. 






ஒரு பக்கம் ரெய்டில் உள்ளே புகுந்து சிறப்பாக செயல்பட்டு ஹிமான்ஷு சிங், 8 ரெய்டு புள்ளிகளை அள்ளினார். அதேபோல், டிபெண்டிங்கில் சாஹில் குலியா 10 டிபெண்ட்ஸ் பாயிண்ட்ஸ்களை எடுத்தார்.