பாரீஸ் ஒலிம்பிக் 2024:


பாரீஸ் ஒலிம்பிக் 2024ல் ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்க தடகள வீரர் ரியான் க்ரூசர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வேடிக்கையான வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இன்டோர் மற்றும் அவுட்டோர் ஆகிய இரண்டிலும் உலக சாதனை படைத்த ரியான் க்ரூசர், கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெற்ற ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 22.90 மீட்டர் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.


இந்த வெற்றியின் மூலம், அவர் ரியோ 2016, டோக்கியோ 2020 மற்றும் பாரீஸ் ஒலிம்பிக் என மூன்று ஒலிம்பிக் தொடர்களில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இரு உலக சாம்பியனான அவர் பதக்கம் வென்ற கையோடு அமெரிக்கா திரும்பினார்.


வைரல் வீடியோ:


இந்நிலையில் தான் குண்டு எறிதல் தொடர்பாக பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில்  அவரது செல்லப் பிராணியான நாய், கழுத்தில் தங்கப் பதக்கத்துடன் அவருக்கு சற்று தள்ளி அமர்ந்திருக்கிறது.






மேலும் அவர் அந்த வீடியோவிற்கு "வீட்டில் இருப்பது நல்லது"என்று  தலைப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு 2018 குளிர்கால ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற லாரன் கிப்ஸ் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில், "ஹாஹா இது மிகவும் நல்லது. உங்கள் நாய்க்கு இந்த செயல் கண்டிப்பாக பிடிக்கும்"என்று கூறியுள்ளார்.


 


மேலும் படிக்க: Wayanad Landslide: வயநாடு மக்களுக்கு நிதியுதவி அளித்த செஸ் மாஸ்டர் டி குகேஷ்! குவியும் பாராட்டு


மேலும் படிக்க: Paris Olympics 2024: ஒலிம்பிக்கிற்கான ரூ.470 கோடி வீணா? 32 ஆண்டுகளில் இல்லாத நிலை, எதிர்பார்ப்புகள் பலித்ததா?