யூரோ 2024 காலிறுதி போட்டி:


யூரோ 2024 காலிறுதி போட்டியில் நேற்று (ஜூன் 5) ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின.  முன்னதாக இதுவரை ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணிகள் மூன்று யூரோ பட்டங்களை வென்றதால் இன்றைய போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அதன்படி, ஆரம்பம் முதலே இரு அணிகளும் சிறப்பாக விளையாடின.  


ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ஸ்பெயின் அணியின் கேபன் அல்வாரோ மொரட்டா வேகமாக ஒரு ஷாட் ஒன்றை அடித்தார். ஆனால் அது அந்த அணிக்கு கோலாக மாறவில்லை. அப்போது ஸ்பெயின் அணியின் மற்றொரு வீரரான குகுரெல்லாவிற்கு காயம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜெர்மனி வீரர் டோனு க்ரூஸிடமிருந்து பெட்ரிக்கு ஒரு ஃபவுல் வந்தது.


பரபரப்பான ஆட்டம்:


ஆரம்பத்திலேயே பெட்ரிக்கு காயம் ஏற்பட்டதால் ஸ்பெயின் அணிக்கு மிகப்பெரிய அடியாக விழுந்தது. இதனிடையே இரு அணிகளுக்கும் முதல் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இரு அணிகளும் இதை தவறவிட்டன. சில நிமிடங்களுக்குப் பிறகு, ஸ்பெயின் வீரர் யமலுக்கு ஒரு ஃப்ரீ-கிக்கில் இருந்து கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அவரது முயற்சியும் பொய்யாக போனது.


ஸ்பெயின் அணி வெற்றி:


மறுபுறம் அண்டோனியோ ரூடிகருக்கு மஞ்சல் அட்டை வழங்கப்பட்டது. இதனால் ஜெர்மனி அணி சென்டர் பேக்கில் கவனமாக இருக்க வேண்டிய சூழல் நிலவியது.  அதனைத்தொடர்ந்து டேவிட் ரூம் மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. ஆட்டத்தின் முதல் பாதிவரை இரு அணிகளாலும் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. 






இந்நிலையில் முதல் பாதிக்கு பிறகு ஸ்பெயின் அணி தங்களது முதல் கோலை பதிவு செய்தது. இரு அணிக்கும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் ஸ்பெயின் அணி ஆக்ரோஷமாக விளையாடியது. இருப்பினும் ஜெர்மனி தங்களது தற்காப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.


இச்சூழலில் ஜெர்மனி அணி வீரர் ப்ளோரியன் விர்டிஸ் ஒரு கோலை அடித்து ஆட்டத்தை விறுவிறுப்பான கட்டத்திற்கு அழைத்துச் சென்றார். இவ்வாறாக ஆட்ட நேரமுடிவில் ஜெர்மனியை வீழ்த்தி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் அரையிறுதிச் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை ஸ்பெயின் அணி பெற்றது.