டோக்கியோ பாராலிம்பிக் பாரா பேட்மிண்டன் போட்டியில் நேற்று ஆடவருக்கான எஸ்.எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் அதே பிரிவில் இந்தியாவின் மனோஜ் சர்கார் வெண்கலப்பதக்கத்தை வென்றார். அதைத் தொடர்ந்து நேற்று ஆடவர் எஸ்.ஹெச் 6 பிரிவு ஒற்றையர் பிரிவு போட்டியின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் பிரிட்டன் கூம்ப்ஸை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். 


இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் நம்பர் 2 வீரரான கிருஷ்ணா நாகர் ஹாங்காங் சீன வீரர் சு மான் கையை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் 14 நிமிடங்கள் நடைபெற்ற முதல் கேமை இந்திய வீரர் கிருஷ்ண நாகர் 21-17 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இரண்டாவது கேமில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாங்காங் வீரர் 21-16 என்ற கணக்கில் வென்றார். இதனால் இரு வீரர்களும் 1-1 என சமமாக இருந்தனர். இதைத் தொடர்ந்து போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க மூன்றாவது கேம் நடைபெற்றது. அதில், இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை பெற்று வந்தனர். இறுதியில் 21- என்ற கணக்கில்  கிருஷ்ண நாகர் வென்று தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். 


 






முன்னதாக இன்று காலை நடைபெற்ற ஆடவர் எஸ்.எல் 4 பிரிவு வெண்கலப்பதக்க போட்டியில் இந்தியாவின் தருண் தில்லான் இந்தோனேஷிய வீரர் ஃபிரடியை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் சற்று தடுமாறிய தருண் தில்லான் 21-17,21-11 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். அத்துடன் வெண்கலப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். 


அதே பிரிவில் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சுஹேஷ் யேத்திராஜ் பிரான்சு வீரர் லூகாஸ் மசூரை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 15-21,21-17,21-15 என்ற கணக்கில் பிரான்சு வீரர் லூகாஸ் மசூர் தங்கப்பதக்கத்தை வென்றார். இறுதி போட்டியில் தோல்வி அடைந்து ஐஏஎஸ் அதிகாரி சுஹேஷ் யேத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார். அத்துடன் பாரா பேட்மிண்டனில் இந்தியாவின் மூன்றாவது பதக்கத்தையும் வென்று அசத்தினார். 


மேலும் படிக்க: ஐஏஎஸ் டூ பாராலிம்பிக் வெள்ளி: சுஹேஷ் யேத்திராஜின் நம்பிக்கை பயணம் !