டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இன்று காலையே இந்தியாவிற்கு மிகவும் சிறப்பான தொடக்கமாக அமைந்தது. மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீராங்கனை அவானி லெகாரா தங்கம் வென்று அசத்தினார். அதன்பின்னர் தடகளத்தில் இந்திய அணி மூன்று பதக்கங்களை வென்றது. யோகேஷ் கத்தூனியா ஆடவர் வட்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவரைத் தொடர்ந்து ஆடவர் எஃப் 46 பிரிவில் இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா வெள்ளிப்பதக்கமும், சந்தீப் சிங் குர்ஜர் வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தினார். இதனால் ஒரே நாளில் இந்திய அணி 4 பதக்கங்களை வென்று அசத்தியது.
இந்நிலையில் தடகள போட்டிகளில் ஆடவருக்கான எஃப்-64 பிரிவு ஈட்டி எறிதலில் இந்தியாவைச் சேர்ந்த சந்தீப் சௌதரி மற்றும் சுமித் அண்டில் ஆகிய இருவரும் பங்கேற்றனர். இவர்கள் இருவரும் தங்கள் வசம் ஒரு உலக சாதனையை வைத்துள்ளனர். அதனால் இவர்கள் இருவரும் மீதும் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்தது.
இதில் இந்திய வீரரான சுமித் அண்டில் தன்னுடைய முதல் முயற்சியில் 66.95 மீட்டர் தூரம் வீசி தன்னுடைய உலக சாதனையை முறியடித்தார். அதன்பின்னர் தன்னுடைய இரண்டாவது முயற்சியில் அந்த தூரத்தை மீண்டும் தாண்டி 68.08 மீட்டர் தூரம் வீசி மீண்டும் புதிய சாதனைப் படைத்தார். இந்த தூரத்தை மீண்டும் அவருடைய உலக சாதனையை ஐந்தாவது முயற்சியில் 68.85 மீட்டர் வீசி முறியடித்து மீண்டும் புதிய உலக சாதனைப் படைத்தார். இதன்மூலம் டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு இரண்டாவது தங்கப்பதக்கத்தை சுமித் அண்டில் பெற்று தந்துள்ளார்.
மற்றொருசந்தீப் சௌதரி தன்னுடைய முதல் முயற்சியில் 61.13 மீட்டர் தூரத்தை வீசினார். இரண்டாவது முயற்சியில் ஃபவுல் செய்தார். அதபின்னர் மூன்றவது முயற்சியில் 62.20 மீட்டர் தூரம் வீசினார். அதன்பின்னர் இரண்டு முயற்சியிலும் இவர் ஃபவுல் செய்தார். இறுதி முயற்சியில் இவர் 62.02 தூரம் வீசினார். இதனால் 4ஆவது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.
மேலும் படிக்க:டோக்கியோ பாராலிம்பிக் : வினோத் குமாரின் வெண்கலப் பதக்கத்தை ரத்து செய்தது தொழில்நுட்ப குழு.. ஏன்?