டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் சரியாக 10 நாட்கள் உள்ளன. இந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்கும் முக்கிய விளையாட்டுகளில் ஒன்று மல்யுத்தம். இந்நிலையில், மல்யுத்த பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ரவிகுமார் தாஹியா இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார். 


இன்று நடைபெற்ற 58 கிலோ எடைப்பிரிவு போட்டியில், இந்தியாவின் வினேஷ் போகட் விளையாடினார். முதல் சுற்று போட்டியில் சுவீடனின் சோஃபியாவை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில், 7-1 என்ற புள்ளிக்கணக்கில் போட்டியை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.






அதனை தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி போட்டியில், 2 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பெலாரஸ் அணி வீராங்கனை வனீசாவை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில், தொடக்கம் முதலே வனீசா முன்னிலை பெற்றார். எனினும், அடுத்த கேமில் முன்னேற்றம் கண்ட வினேஷ், 3 புள்ளிகள் பெற்றார். ஆனால், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய வனீசா, 3-9 என்ற புள்ளிக்கணக்கில் போட்டியை வென்றார். இதனால், அரை இறுதிக்கும் செல்லும் வாய்ப்பை வினேஷ் இழந்தார். ரெபிசாஜ் முறையில் வினேஷ் போகட் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை பெறுவார என்பது உறுதியாக மற்ற போட்டிகளின் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டி உள்ளது.


2008 ஒலிம்பிக்கில் சுஷில் குமார், 2012 ஒலிம்பிக்கில் யோகேஷ்வர் தத், 2016 ரியோ ஒலிம்பிக்கில் சாக்‌ஷி மாலிக் ஆகியோர் பதக்கம் வெல்ல வாய்ப்பிருந்ததற்கு காரணம், இந்த ரெபிசாஜ் சுற்று. காலிறுதிக்கு முந்தய சுற்றில் தோற்று போகும் வீரர் / வீராங்கனைகள் எதிர்த்து போட்டியிட்டவர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேறினால், வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு சென்ற வீரர் / வீராங்கனையோடு அரை இறுதியில் போட்டியிட்டவர் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மோதுவார். அந்த போட்டியில், முன்பு இறுதி போட்டிக்குச் சென்ற வீரர் / வீராங்கனையை எதிர்த்து போட்டியிட்டவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும். 






எளிதாக சொல்ல வேண்டும் என்றால், பலம் வாய்ந்த வீரர் / வீராங்கனைகளிடம் தோல்வி அடைந்தவர்களுக்கு ‘ரெஸ்க்யூ’ எனப்படும் அந்த தொடரில், மற்றொரு வாய்ப்பு அளிக்கப்படுவதே ‘ரெபிசாஜ்’. எனவே, ரெபிசாஜ் முறையில் வினேஷ் போகட்டிற்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படுமா என்பதை பொருந்திருந்து பார்க்க வேண்டும்.


2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். அந்த முறை அடைந்த ஏமாற்றத்தை இம்முறை இவர் பதக்கமாக மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2021ஆம் ஆண்டில் இவருடைய ஃபார்ம் அவ்வளவு சிறப்பாக இருந்தது. 53 கிலோ எடைப்பிரிவில் உலக சாம்பியனை தோற்கடித்து தங்கம், ஆசிய மல்யுத்தத்தில் தங்கம், ரேங்கிங் சிரீஸ் மல்யுத்தத்தில் தங்கம் என மொத்தமாக நான்கு தங்க பதக்கங்களை இந்தாண்டு மட்டும் வென்றுள்ளார். பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் காலிறுதி சுற்றில் இருந்து வெளியேறியுள்ளார் வினேஷ் போகட்.