டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பி.வி.சிந்து உலக தரவரிசையில் 9ஆம் இடத்தில் உள்ள சீன வீராங்கனை ஹீ பிங் ஜியோவை எதிர்த்து விளையாடினார். இவர்கள் இருவரும் சர்வதேச போட்டிகளில் இதுவரை 15 முறை மோதியுள்ளனர். அதில் ஹீ பிங் 9 முறையும் சிந்து 6 முறையும் வென்றுள்ளனர். ஒலிம்பிக் வெண்கலப்பதக்க போட்டி என்பதால் இரு வீராங்கனைகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி முதல் கேமை பி.வி.சிந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  முதல் கேமை 21-13 என்ற கணக்கில் பி.வி.சிந்து வென்று அசத்தினார். 

அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கேமில் சிறப்பாக விளையாடிய சிந்து 21-15 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கத்தையும் வென்று அசத்தினார். ஒலிம்பிக் போட்டிகளில் சிந்துவின் இரண்டவது பதக்கம் இதுவாகும். 

சிந்துவின் வெற்றியை அடுத்து அவருக்கு ட்விட்டரில் வாழ்த்துமழை குவிந்து வருகின்றது. 

குடியரசுத் தலைவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், 'இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்கிற பெருமையை அடைகிறார் சிந்து. நிலைத்தன்மை மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு புதிய அளவுகோலை சிந்து உருவாக்கியிருக்கிறார். இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்'எனத் தெரிவித்துள்ளார். 


 






பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் சிந்துவை இந்தியாவின் பெருமை என்றும் நாட்டின் சிறந்த ஒலிம்பியன்களில் ஒருவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். 






 


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வாழ்த்துச் செய்தியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் வாங்கிக்கொடுத்ததற்கு வாழ்த்து கூறியுள்ளார். 


 






புதுச்சேரி ஆளுநர் தமிழிசை விடுத்துள்ள வாழ்த்தில் சிந்துவுக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். 


 






சட்டத்துறை அமைச்சர் கிரென் ரிஜ்ஜு விடுத்துள்ள வாழ்த்தில்..






கிரிக்கேட் வீரர் ஹர்பஜனின் வாழ்த்து செய்தியில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து தந்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். 





நடிகர்கள் துல்கர் சல்மான், டாப்சி, மஞ்சு வாரியர் மற்றும் அபிஷேக் பச்சன் உள்ளிட்டோரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.