டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி  ஆஸ்திரேலிய அணியை 1-0 என்ற கணக்கில் தோற்கடித்து இந்திய மகளிர் அணி முதல் முறையாக அரையிறுதி சென்றுள்ளது. அத்துடன் 5 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஆஸ்திரேலிய மகளிர் அணியை தோற்கடித்து ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி அசத்தியுள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக பதக்கம் வெல்லும் வாய்ப்பையும் இந்திய மகளிர் அணி பெற்றுள்ளது. 


41 ஆண்டுகால ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டி வரலாற்றில் முதல் முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி, 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்று அரை இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளதால், இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றது. நாட்டின் முக்கிய பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.