Hockey Semi Finals: 3-2 என முன்னிலை பெற்றது பெல்ஜியம்!

49 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது இந்திய ஹாக்கி. இன்று நடைபெற்று வரும் அரை இறுதி போட்டியில், பெல்ஜியத்தை எதிர்த்து விளையாடி வருகிறது. 

கார்த்திகா ராஜேந்திரன் Last Updated: 03 Aug 2021 08:27 AM

Background

இந்திய ஹாக்கி அணி கடைசியாக 1980ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது. அதன்பின்னர் நடைபெற்ற எந்த ஒரு ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய அணி பதக்கம் வெல்லவில்லை. அந்த முறை ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி போட்டி இல்லை. புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் விளையாடியது. கடைசியாக 1972ஆம் ஆண்டு ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. அதன்பின்னர் தற்போது 49 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இன்று நடைபெற்று வரும் அரை இறுதி போட்டியில், பெல்ஜியத்தை எதிர்த்து விளையாடி வருகிறது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.