டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 7ஆவது நாளான இன்று இந்தியாவிற்கு நன்றாக அமைந்தது. பி.வி.சிந்து வெற்றி, ஆடவர் ஹாக்கி அணியின் வெற்றி, அடானு தாஸ் வில்வித்தையில் வெற்றி, குத்துச்சண்டையில் சதீஷ் குமார் வெற்றி எனப் பல வெற்றி செய்திகள் அடுத்தடுத்து வந்த வண்ணம் இருந்தன. இன்றைய நாளில் ஒரே சோகமாக அமைந்தது குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் தோல்வி தான். அவர் இரண்டாவது சுற்றில் வெலன்சியாவிடம் தோல்வி அடைந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் நாளை எந்தந்த இந்திய வீரர் வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர்?
ஹாக்கி: மகளிர்: இந்தியா vs ஐயர்லாந்து (காலை 8.15 மணி)
ஆடவர்: இந்தியா vs ஜப்பான்(மதியம் 3.00 மணி)
துப்பாக்கிச் சுடுதல்: மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் தகுதிச் சுற்று: மனு பாக்கர், ராஹி சர்னோபட் (காலை 5.30 மணி)
தடகளம்: 3000 மீட்டர் ஸ்டிபிள்செஸ்(முதல் சுற்று) -அவினாஷ் சாப்லே (காலை 5.30 மணி)
மகளிர் 100மீட்டர்: டூட்டி சந்த்(காலை 8.10 மணி)
ஆடவர் 400 மீட்டர் தடை ஓட்டம்: எம்.பி.ஜபீர்(காலை 7.25 மணி)
கலப்பு 4*400 மீட்டர் ரிலே: அலெக்ஸ் அந்தோனி, சர்தக் பாம்ப்ரி, ரேவதி வீரமணி,சுபா வெங்கடேசன் (மாலை 4.30 மணி)
பேட்மிண்டன்: மகளிர் ஒற்றையர் காலிறுதிச் சுற்று: பி.வி.சிந்து vs அகேன் யமாகுச்சி(மதியம் 1.15 மணி)
வில்வித்தை: மகளிர் தனிநபர் பிரிவு: மூன்றாவது சுற்று: தீபிகா குமாரி vs பெரோவா(காலை 6.00 மணி)
குத்துச்சண்டை: மகளிர் 60 கிலோ எடைப்பிரிவு: சிம்ரன்ஜீத் கவுர் vs சீசோன்டி(தாய்லாந்து) (காலை 7.15மணி)
மகளிர் 69 கிலோ எடைப்பிரிவு காலிறுதிச்சுற்று: லோவ்லினா பார்கோயின் vs சின் நியான்(சீன தைபே)(காலை 7.50 )
மேலும் படிக்க: ஒலிம்பிக்கில் சம்பவம் செய்த ‛கடிச்சுத்துப்பட்டா’ பரம்பரை!