டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 12ஆவது நாளான இன்று இந்தியாவிற்கு காலையிலேயே சிறப்பான தொடக்கம் கிடைத்தது. ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார். அதன்பின்னர் மல்யுத்ததில் ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிகுமார் தாஹியா இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். மற்றொரு இந்திய வீரரான தீபக் புனியா ஆடவர் 86 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதியில் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்க போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். கடைசியாக இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்க போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது. 


இந்நிலையில் 13ஆவது நாளான நாளை எந்தெந்த இந்திய வீரர் வீராங்கனைகள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கனர் தெரியுமா?


ஹாக்கி: ஆடவர் வெண்கலப் பதக்கம் போட்டி: இந்தியா vs ஜெர்மனி (காலை 7.00 மணி)


மல்யுத்தம்: மகளிர் 57 கிலோ: ரெபிசாஜ் ரவுண்டு அன்ஷூ மாலிக் vs வெலேரியா (ரஷ்யா)(காலை 7.30 மணிக்கு )


                           மகளிர் 53 கிலோ: வினேஷ் போகட் vs சோஃபியா மெக்டாலனா(ஸ்வீடன்)(காலை 8 மணிக்கு)


                           ஆடவர் 57 கிலோ: இறுதிப் போட்டி- ரவிக்குமார் தாஹியா vs உகுயேவ் (ரஷ்யா)(மாலை 3 மணிக்கு மேல் )


                                ஆடவர் 86கிலோ: வெண்கலப்பதக்கப் போட்டி- தீபக் புனியா ( மாலை 3.30 மணிக்கு மேல் )


  தடகளம்: ஆடவர் 20 கிலோ மீட்டர் நடைப் போட்டி: கேடி இர்ஃபான், சந்தீப் குமார், ராகுல் ரோஹில்லா (மதியம் 1.00 மணி) 


இந்திய ஆடவர் ஹாக்கி அணி நாளை வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் ஜெர்மனி அணியை எதிர்த்து விளையாடுகிறது. ஹாக்கி விளையாட்டில் இந்த இரு அணிகளும் தலா 11 பதக்கங்களை ஒலிம்பிக் போட்டியில் பெற்றுள்ளன. அவற்றில் இந்திய அணி 8 தங்கமும் ஜெர்மனி அணி 4 தங்கமும் வென்றுள்ளன. நாளையை போட்டியில் வெற்றி பெறும் அணி ஒலிம்பிக் ஹாக்கியில் அதிக பதக்கங்கள் வென்ற அணியாக உருவெடுக்கும். இதனால் இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




அதேபோல் மல்யுத்தில் இந்தியாவின் வினேஷ் போகட் தன்னுடைய முதல் சுற்று போட்டியில் களமிறங்குகிறார். இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் நிலை வீராங்கனை என்பதால் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தவிர ரவிகுமார் தாஹியா இறுதிப் போட்டியில் பங்கேற்கிறார். அவரும் தங்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது. 


மேலும் படிக்க:இந்தியாவிற்கு 4-வது பதக்கத்தை உறுதிசெய்த ரவிக்குமார் தாஹியா, யார் தெரியுமா?