பெண்பிள்ளைகளைப் படிக்க வைப்பதே இன்னும் பெருங்கனவாக இருக்கும் தேசத்தில் பொருளாதாரம், சமூகம் என பலதடைகளுக்கு நடுவே அவர்களை விளையாட்டில் பதக்க வேட்டைக்காரிகளாக வளர்ப்பதெல்லாம் போராட்டம் என்ற சொல்லில் கூடப் பொருத்திவிட முடியாது. 2021 ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தேர்வாகி இருக்கும் 21 வயது திருச்சி பெண் சுபாவிற்கும் அது அப்படியான பாதைதான். இந்த உயரத்தை எட்ட அவர் 8ம் வகுப்பிலிருந்து பயிற்சி ஓட்டத்தில் பயிற்சி எடுக்க வேண்டி இருந்தது. 20 தேசிய அளவிலான போட்டிகள், 8 சர்வதேச அளவிலான போட்டிகளைச் சந்திக்க வேண்டி இருந்தது. சர்வதேசப் போட்டிகளில் 3ல் பதக்கம் வென்றிருக்கிறார். கனவுகளை எட்ட ஆண் பெண் அடையாளம் தேவையில்லை, விடாமுயற்சியும் வியர்வை சிந்தும் உழைப்பும்தான் தேவை என்பதற்கு சுபா ஒரு உதாரணம். 




‘நான் எட்டாவதுலேர்ந்து பன்னிரெண்டாவது வரை சென்னையில் தங்கிதான் படிச்சேன். அங்கேதான் எனக்கு பயிற்சியாளர் இந்திரா அறிமுகமானாங்க. அவங்க எனக்குக் கொடுத்த பயிற்சியும் ஊக்கமும்தான் என்னைத் தொடர்ந்து ஓடவைச்சது. சின்ன வயசுலேர்ந்தே எனக்கு ஸ்போர்ட்ஸ்தான் எல்லாம். என்னைச் சென்னைக்கு அனுப்ப முதலில் ஊர்க்காரங்க யாரும் ஒத்துகலை. பொண்ணை ஸ்போர்ட்ஸ்ல விடாதிங்கனு சொன்னாங்க. பொண்ணு வெளியூருக்கு அனுப்புனா வழிமாறிப்போயிடும்னு சொன்னாங்க. ஆனாலும் அம்மா என்னை சென்னைக்கு அனுப்புறதுல உறுதியா இருந்தாங்க.என் தாத்தாவும் எனக்கு அவ்வளவு சப்போர்ட்டா இருந்தாரு’ என்கிறார் சுபா. 




தேசிய அளவிலான போட்டியில் பெங்களூருவில் வெள்ளி பதக்கம் வாங்கினாங்க. ஆசிய ஜூனியரில் பதக்கம் ஜெயிச்சாங்க. இப்போ ஒலிம்பிக் போறாங்க. ஆண்கள் ஆதிக்கம் அதிகமா இருக்கற மேம்பாட்டு வாரிய விடுதியிலிருந்து ஒரு பெண் ஒலிம்பிக் போட்டிக்குப் போவது எங்களுக்குப் பெருமை.

 


ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அரசு வேலைக்கு அலையாய் அலைந்துகொண்டிருக்கிறார் சுபா. தன் கனவுக்குப் பக்கபலமாக இருக்கும் அம்மாவை நல்லபடியாகப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பது அவரது ஆசை. 


சுபாவை முதன்முதலில் சந்தித்த அனுபவத்தைப் பகிர்கிறார் அவரது கோச் இந்திரா. ‘விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் விடுதியில்தான் முதன்முதலில் சுபாவைச் சந்தித்தேன்.அப்போது அவர் எட்டாவது படித்துக்கொண்டிருந்தார். அவருக்கு ஒருவருடம் பயிற்சி கொடுத்த பிறகுதான் அவர் 400 மீட்டரில் சிறப்பாக விளையாடுவார் எனத் தெரியவந்தது.தேசிய அளவிலான போட்டியில் பெங்களூருவில் வெள்ளி பதக்கம் வாங்கினாங்க. ஆசிய ஜூனியரில் பதக்கம் ஜெயிச்சாங்க. இப்போ ஒலிம்பிக் போறாங்க. ஆண்கள் ஆதிக்கம் அதிகமா இருக்கற மேம்பாட்டு வாரிய விடுதியிலிருந்து ஒரு பெண் ஒலிம்பிக் போட்டிக்குப் போவது எங்களுக்குப் பெருமை. அவங்களோட இலக்கும் என்னோட இலக்கும் பயிற்சி, ஓட்டம் என்பதாக மட்டுமே இருந்தது. அவங்க வீட்டுக்குப் போகனும்னு சொன்னதே கிடையாது. அம்மாதான் அடிக்கடி வந்து பார்த்துட்டுப் போவாங்க’ என சுபாவைப் பற்றி பகிர்கிறார் இந்திரா. 


சுபா 24 வயதுக்குள் தனிப்பதக்கம் வாங்கவேண்டும் என்பது ஆசையல்ல பிரார்த்தனை என முடிக்கிறார் அவர். பிரார்த்தனைகள் பதக்கவேட்டைக்கு பக்கபலமாக இருக்கட்டும்.