Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவை ஏராளமாப ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.
முடிவுற்றது பாரிஸ் ஒலிம்பிக்:
சர்வதேச அளவில் விளையாட்டு உலகில் உச்சபட்ச நிகழ்ச்சியாக கருதப்படும், பாரிஸ் ஒலிம்பிக் கடந்த மாதம் 26ம் தேதி பாரிஸில் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக ஏராளமான நாடுகளைச் சேர்ந்த, 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் அந்நகரில் குவிந்தனர். தங்களது அபாரமான திறனை வெளிப்படுத்தி, புதிய சாதனைகளை படைத்து பதக்கங்களை வேட்டையாடினர். இந்நிலையில் சுமார் இரண்டு வாரங்களாக நடந்து வந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டி, இந்திய நேரப்படி இன்று அதிகாலை முடிவடைந்தது.
வீரர்களின் அணிவகுப்பு:
நிறைவு விழாவின் ஒரு பகுதியாக பங்கேற்ற நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தங்களது தேசிய கொடியை ஏந்தி அணிவகுப்பில் ஈடுபட்டனர். அந்த வகையில் இந்தியா சார்பில், ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீஜேஷ் மற்றும் நடப்பு ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற மனு பாக்கர் ஆகியோர் இந்திய கொடியை ஏந்திச் சென்றனர். இந்த நிறைவு விழாவில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அவருடைய மனைவி பிரிகிட் மேக்ரான், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் மற்றும் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் ஏற்பாட்டு குழுவின் தலைவர் டோனி ஸ்டான்குவெட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வண்ணமயமான நிறைவு விழா:
பிரான்சில் பாரீஸ் நகருக்கு வெளியே புறநகர் பகுதியில் அமைந்த ஸ்டேட் டி பிரான்ஸ் என்ற அந்நாட்டின் தேசிய ஸ்டேடியம் ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது. நாடுகளின் தேசிய கொடிகளும் அதன் மேல்புறத்தில் காணப்பட்டன. ஒலிம்பிக் சின்னமான 5 வளையங்கள் வண்ண விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டன. வெனிஸ் கடற்கரையில் விழாவை முடிக்கும் வகையில், ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ், பில்லி எலிஷ், ஸ்னூப் டோக் மற்றும் டாக்டர் ட்ரே உள்ளிட்டோரின் இசைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதற்கான தத்ரூபமான ஏற்பாடுகள் காண்போரை வியக்கச் செய்தது. பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்த அமெரிக்காவைச் சேர்ந்த வீரர்களும், மைதானத்தில் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஒலிம்பிக் கொடியை ஒப்படைத்த டாம் க்ரூஸ்:
தொடர்ந்து பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கான சுடர் அணக்கப்பட்டது. பின்பு, மைதானத்தின் கூரையில் இருந்து குத்த்த ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ், மோட்டார்சைக்கிளில் பயணித்தபடி ஒலும்பிக் கொடியை ஏந்திச் சென்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேயரிடம் வழங்கினார். இதன் மூலம், வரும் 2028ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற உள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மைதானத்தில் நடைபெற்ற வானவேடிக்கை பிரமிப்பை ஏற்படுத்தியது. பகலை இரவாக மாற்றியது. இந்த கண்கொள்ளா அழகை, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்து கண்டு ரசித்தனர்,