பாரீஸ் ஒலிம்பிக் 2024:


பாரீஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சீனா 22 தங்கபதக்கங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும், மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும், நான்காவது இடத்தில் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை 3 வெண்கலப்பதக்கங்களுடன் 60வது இடத்தில் இருக்கிறது. அதே நேரம் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா ஆகியோரும் இந்தியாவின் கடைசி நம்பிக்கையாக இருக்கின்றனர்.


இந்தியா - ஜெர்மனி:


இச்சூழலில் தான் இந்திய ஹாக்கி அணி இன்று களம் இறங்கியது. அதன்படி அரையிறுதியில் ஜெர்மனி அணியை இந்திய ஹாக்கி அணி எதிர்கொண்டது. இதில் முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருந்தது. அதன்படி முதல் கோலை இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் அடித்தார்.






அதே நேரம் இரண்டாவது குவாட்டரில் ஜெர்மனி அணி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அதேபோல் 3 வது குவாட்டரும் (quarter) 2-2 என்ற கணக்கில் முடிந்தது. இதனால் ஆட்டம் விறுவிறுப்பானது. கடைசி 4 நிமிடங்கள் இருக்கும் சூழலில் ஜெர்மனி அணி 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.


ஆட்ட நேர முடிவில் ஜெர்மனி அணி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.