Paris Olympics 2024: வினேஷ் போகத் வழக்கு.. தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிமன்றம்!

வினேஷ் போகத் மேல்முறையீட்டு வழக்கு மீதான தீர்ப்பை ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு நீட்டித்துள்ளது விளையாட்டு  நடுவர் நீதிமன்றம்.

Continues below advertisement

தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்:

கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய பாரீஸ் ஒலிம்பிக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார். அதன்படி இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனையை எதிர்கொள்ள தயாராக இருந்தார். இதனிடையே பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்தி கூறி வந்த சூழலில் மிகப்பெரிய அதிர்ச்சி செய்தி ஒன்று வந்தது.

Continues below advertisement

அதாவது வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மல்யுத்த விதிகளின் படி 50 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்பவர்கள் அந்த எடையை விட கூடுதல் எடையில் இருக்கக் கூடாது. ஆனால் அவர் 100 கிராம் அதிக எடையுடன் இருக்கிறார். இதனால் தான் இந்த தகுதி நீக்கம் என்று ஒலிம்பிக் கமெட்டி அறிவித்தது. அதே நேரம் அமெரிக்கா வீராங்கனை சாராவுக்கு தங்கமும், கியூபா வீராங்கனை லோபஸ் வெள்ளிப் பதக்கமும், சுசாகி வெண்கலமும் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

தீர்ப்பு ஒத்திவைப்பு:

இந்த அதிர்ச்சியில் இருந்த வினேஷ் போகத் சர்வதேச மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெருவதாகவும் தன்னால் இன்னும் போராட முடியாது என்றும் கூறினார். இந்த நிலையில் வினேஷ் போகத் விளையாட்டு தீர்ப்பாயத்தில் தனது தகுதிநீக்கத்தை எதிர்த்து வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி மேல்முறையீடு செய்தார்.

இதில் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று (ஆகஸ்ட் 10) தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டின் மீதான இந்த தீர்ப்பை  ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு  நீட்டித்துள்ளது விளையாட்டு நடுவர் நீதிமன்றம். 

 

 

Continues below advertisement