Paris Olympics 2024 Matches Today, august 7th: பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்:
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகள் மெய்சிலிர்க்க வைக்கும் திறமையை வெளிப்படுத்தி பதக்க வேட்டைகளை நடத்தி வருகின்றனர். பதக்கப் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பதில் சீனா மற்றும் அமெரிக்கா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே, 10 நாட்களுக்கான போட்டிகளின் முடிவில் பதக்கப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்திய நாடுகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் அமெரிக்கா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
அதன்படி, 24 தங்கம், 31 வெள்ளி மற்றும் 31 வெண்கல பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 22 தங்கம் உட்பட 59 பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 14 தங்கம் உட்பட 35 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளது. இந்தியா மூன்று வெண்கல பதக்கங்களுடன் 63வது இடத்தை பிடித்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்:
வ.எண் | நாடுகள் | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
1 | அமெரிக்கா | 24 | 31 | 31 | 86 |
2 | சீனா | 22 | 21 | 16 | 59 |
3 | ஆஸ்திரேலியா | 14 | 12 | 9 | 35 |
4 | ஃப்ரான்ஸ் | 13 | 16 | 19 | 48 |
5 | இங்கிலாந்து | 12 | 15 | 19 | 46 |
6 | தென்கொரியா | 11 | 8 | 7 | 26 |
7 | ஜப்பான் | 11 | 6 | 12 | 29 |
8 | இத்தாலி | 9 | 10 | 7 | 26 |
9 | நெதர்லாந்து | 8 | 5 | 6 | 19 |
10 | ஜெர்மனி | 8 | 5 | 4 | 17 |
எதிர்பார்ப்பில் வினேஷ் போகத்:
நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி, இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்த போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று இரவு 9.45 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியிலும் வென்று, வினேஷ் போகத் தங்கப் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அது சாத்தியமானால், மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெறுவார்.
இந்திய வீரர், வீராங்கனைகளுக்கான இன்றைய போட்டிகள்:
தடகளம்: மராத்தான் ரேஸ் வாக் கலப்பு ரிலே (சூரஜ் பன்வார், பிரியங்கா கோஸ்வாமி) | காலை 11 மணி முதல்
கோல்ஃப்: பெண்கள் சுற்று 1 (அதிதி அசோக், திக்ஷா தாகர்) | மதியம் 12:30 மணி முதல்
டேபிள் டென்னிஸ்: ஆண்கள் & பெண்கள் அணி காலிறுதி ( இந்தியா - ஜெர்மனி) | மதியம் 1:30 மணி முதல்
தடகளம்: ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் தகுதி (சர்வேஷ் குஷாரே) | மதியம் 1:35 மணி முதல்
தடகளம்: பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டம் சுற்று 1 (ஜோதி யார்ராஜி) | மதியம் 1:45 முதல்
தடகளம்: பெண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதி (அன்னு ராணி) | மதியம் 1:55 முதல்
மல்யுத்தம்: பெண்களுக்கான 53 கிலோ ரவுண்ட் ஆஃப் 16 (ஆண்டிம் பங்கல்) | மாலை 3 மணி முதல்
மல்யுத்தம்: பெண்களுக்கான 53 கிலோ காலிறுதி (தகுதிக்கு உட்பட்டது) | மாலை 4:20 மணி முதல்
மல்யுத்தம்: பெண்களுக்கான 50 கிலோ ஃப்ரீ ஸ்டைல் இறுதிப்போட்டி (வ்னேஷ் போகத் - சாரா) | இரவு 09:45 மணி முதல்
மல்யுத்தம்: பெண்களுக்கான 53 கிலோ அரையிறுதி (தகுதிக்கு உட்பட்டது) | இரவு 10:25 முதல்
தடகளம்: ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் தகுதி (பிரவீன் சித்திரவேல், அப்துல்லா அபூபக்கர்) | இரவு 10:45 முதல்
பளு தூக்குதல்: பெண்கள் 49 கிலோ (மீராபாய் சானு) | இரவு 11 மணி முதல்